2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

அத்யாப்பன 2010 கல்விக் கண்காட்சி இன்று ஆரம்பம்

Super User   / 2010 ஒக்டோபர் 15 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(க.கோகிலவாணி)

 'அத்யாப்பன 2010' என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3 நாள் கல்விக் கண்காட்சி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் இன்று முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.

இக்கண்காட்சியில் இந்தியாவின் EdCIL  தலைமையில் அதிக எண்ணிக்கையான இந்திய கல்வி நிறுவனங்கள் பங்குபற்றவுள்ளதாக EdCIL  நிறுவனத்தின் பிரதம பொது முகாமையாளர் என்.எஸ்.பத்மாநாதன் தெரித்தார்.

இது தொடர்பாக, இந்திய கலாசார நிலையத்தில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அனுசரணையுடன்  நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறுகையில்,

இக்கண்காட்சியில் இந்தியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையான வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குபற்றுவதாகவும் கண்காட்சியிலுள்ள 30 வெளிநாட்டு நிலையங்களில் 16 நிலையங்கள் இந்திய நிறுவனங்களுடையவை என்றார்.

இதேவேளை, இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தா, இது தொடர்பாக  விடுத்த செய்தியில் கவர்ச்சிகரமான குறைந்த செலவிலான உயர் தரமான கல்வியை பெறுவதற்கு இலங்கை மாணவர்கள் இந்தியாவை நாடுவதை இந்தியா ஊக்குவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மட்டத்திலான 350 கல்வி நிறுவகங்கள் மற்றும் 16000 கல்லூரிகளுடன் மிக முன்னேற்றகரமான கல்வி உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குவதாகவும் இந்திய உயர் ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 2,500 மாணவர்கள்  உட்பட 40,000 வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.  அவர்களில் 700 மாணவர்கள் இந்தியாவின் புலமைப் பரிசில் அல்லது சுய நிதியளிப்புத்திட்டத்தின் மூலம்  கல்வி கற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மனித அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும்  EdCIL  நிறுவனம், வெளிநாடுகளில் இந்திய கல்வித்துறையை ஊக்குவிப்பதில் கடந்த 27 வருடங்களாக செயற்பட்டு வருவதாக பத்மநாதன் தெரிவித்தார்.

இக்கண்காட்சியில் இலங்கை மாணவர்களுக்கு இந்திய கல்வி குறித்த தகவல்களை வழங்குவதுடன் அனுமதி பெறும் நடவடிக்கைகளுக்கும் உதவும் எனவும் பத்மநாதன் மேலும் கூறினார்.
Pix by: Kushan Pathiraja


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .