2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

த ஃபினான்ஸ் கம்பனியின் பங்கு வழங்கல் ஆரம்பம்

Super User   / 2011 ஜனவரி 12 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் மிகப்பழமையான ஃபினான்ஸ்; கம்பனியான த ஃபினான்ஸ் கம்பனியின் பங்கு வழங்கல் ஜனவரி 11 ஆம் திகதி முதல் ஆரம்பமாகியுள்ளது.

இலங்கை வங்கியின் மேற்பார்வையின் கீழ் செயற்படுதம் மேர்ச்சன்ட் பாங்க் ஒவ் ஸ்ரீலங்காவின் பின்னணியில் செயற்பட்டுவரும் த ஃபினான்ஸ் கம்பனி கடந்து 70 ஆண்டுகளுக்கு மேலாக தடையின்றிய சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த பங்கு வழங்கலின் மூலம் 1.6 பில்லியன் ரூபாவை திரட்ட திட்டமிட்டுள்ளது.

பொது மக்களின் நம்பிக்கையை மேலும் கைக் கொள்ளும் வகையிலும், மத்திய வங்கியின் பணிப்புரைக்கு அமைவாக கம்பனியை மீள் கட்டியெழுப்பும் வகையிலும் த ஃபினான்ஸ் கம்பனி இந்த பங்கு வழங்கலை அறிமுகப்படுத்த ஏதுவாக அமைந்தது.

பங்கு வழங்கல் குறித்து த ஃபினான்ஸ் கம்பனியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கமல் யடவர கருத்து தெரிவிக்கையில், '2011 ஆம் ஆண்டை எமக்கு மிகவும் சாதகமான ஆண்டாக செயற்படுத்த நாம் திட்டமிட்டுள்ளோம். தேசத்தின் ஊக்கக் கொள்கையின் அடிப்படையில் வங்கியியல் துறைசாரா நிதிதுறையில் 'அதிசயம்'ஆக திகழ நாம் முனைகிறோம். இந்த பங்கு வழங்கலின் மூலம் எமது நிறுவனத்தை நாம் மீண்டும் கட்டியெழுப்பவுள்ளோம். 2011 ஆம் ஆண்டில் பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், நிதி துறையில் பெருமளவான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த வாய்ப்புகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நாம் எம்மை தயார்ப்படுத்தியுள்ளோம்.

எமது பெறுமதியான வாடிக்கையாளர்களுக்கு இந்து பங்கு வழங்கலின் மூலம் சிறந்த சேவையை எமக்கு வழங்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுவதுடன், புதிய வாடிக்கையாளர்களை கௌரவிக்கும் வகையிலும் ஊக்குவிக்கும் வகையிலும் 2010ஆம் ஆண்டின் செம்டெம்பர் மாதத்துக்கு முன்னதாக வைப்புகளை மேற்கொண்ட வாடிக்கையாளர்களுக்கு தமது வைப்பில் 10 வீதத்தை முதிர்வு பணமாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளோம் இதன் மூலம் பெருமளவான எமது வாடிக்கையாளர்கள் பயனடையவுள்ளனர்' என்றார்.

கடந்த கால்நிதியாண்டில் கம்பனி புதிய வைப்புகள் 47 வீதம் அதிகரித்துள்ளது. இக்காலப்பகுதியில் மாதாந்த புதிய வைப்பு கட்டணங்கள் 300 மில்லியனுக்கு ரூபாவுக்கு அதிகமாக காணப்பட்டது. கடந்த ஆறு மாத காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் தனது நகை அடகு சேவை நிலையங்களை விஸ்தரிப்பு செய்திருந்ததன் மூலம் கடந்த காலாண்டில் 50 வீத நிதி வருமானத்தை த ஃபினான்ஸ் கம்பனி எய்தியிருந்தது. மேலதிகமாக கம்பனியின் றியல் எஸ்டேட் வருமானம் 173 வீதம் அதிகரித்திருந்தது. இவற்றின் மூலம் கம்பனியின் வருமானம் நான்கு மாதங்களில் 30 வீதம் அதிகரித்துள்ளது.

'எமது கம்பனியின் வரலாற்றில், 2011 ஆம் ஆண்டின் முதலாவது வேலை நாளில் 98.9 மில்லியன் ரூபா எமது வாடிக்கையாளர்களின் மூலம் முதலீடு செய்யப்பட்டது. இது ஒரு சிறப்பான சாதனையாகும். எமது வாடிக்கையாளர்களிடம் நாம் சிறந்த நம்பிக்கையை பெற்றுள்ளமையை இது எடுத்துக்காட்டுகிறது' என யடவர மேலும் தெரிவித்தார்.

இவ்வாறான சாதகமான வருட ஆரம்பத்துடன், நிறுவனத்தின் பொது பங்கு வழங்கலுடன் இந்த வருடத்தில் சிறந்த வர்த்தக பெறுபேறுகளை பெறும் வகையில் த ஃபினான்ஸ் கம்பனி தனது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X