2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்துடன் எதிர்காலத்தை வளமாக்கிட சந்தர்ப்பம்

Super User   / 2011 ஜனவரி 19 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யுத்தத்தின் பின்னர் இலங்கை பெருமளவு அபிவிருத்தி கண்டுவருகிறது. இந்த அபிவிருத்திகளுக்கு முகங்கொடுப்பது மிகவும் சவாலான விடயமாக மாறி வருகிறது. நாட்டை முன்னோக்கி வழிநடத்திச் செல்வதற்கு அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு உரிய துறைகளில் தேவையான பட்டதாரிகளை உருவாக்குவதற்கும், அடுத்த கட்டத்துக்கு இலங்கையை எடுத்துச் செல்வதற்கும், தேவையான வேலைவாய்ப்பு வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கும் இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகம் (SLIIT) தம்மாலான பங்களிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது.

வேகமாக முன்னேற்றமடைந்து வரும் துறைகளில் ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்புகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் அதியுயர் திறமை வாய்ந்த நிபுணர்களை உருவாக்கும் வகையில் இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகம் நிறுவப்பட்டது. தகவல் தொழில்நுட்பம், இலத்திரனியல் பொறியியல் மற்றும் வணிக முகாமைத்துவம் போன்ற பிரிவுகளில் பட்டக்கீழ்ப்படிப்பு கற்கைகளையும், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் முதுமாணிக்கற்களையும் வழங்கி வருகிறது.

இக்கல்வியகத்தில் தமது கற்களை பூர்த்தி செய்த பட்டதாரிகள், முன்னணி நிறுவனங்களான மாஸ், வேர்டூஸா போன்ற நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். துறைசார் நிபுணர்கள் கல்வியகத்தினால் வேலைக்கமர்த்தப்பட்டு மாணவர்களுக்கு சிறந்த பயிற்சிகளையும் துறைசார் நிபுணத்துவத்தையும்  வழங்கும் நடவடிக்கையில் கல்வியகம் ஈடுபட்டுள்ளது.

கல்வியகத்தின் செயற்பாடு குறித்து அதன் தலைவர் பேராசிரியர் எஸ்.கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில், ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் எமது கல்வியகத்தில் கற்கைகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சிறந்த வரவேற்பு காணப்படுவதுடன், அங்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்கள் கூட எமது கல்வியகத்தின் மாணவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர். எமது கல்வியகம் பல்வேறு முன்னணி வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் சேர்ந்து செயற்படுகிறது. இதுவரை எமது கல்வியகம் 10000 பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது' என்றார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X