Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மார்ச் 28 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் ஆடைக் கைத்தொழில்துறையினால் நாட்டின் பொருளாதாரத்துக்கு கிடைக்கும் பங்களிப்பு மற்றும் தேசிய ரீதியில் இந்த துறையின் நிலைப்பாடு குறித்து பிராந்திய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு செயற்திட்டம் வரவேற்கத்தக்கதென கைத்தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் அமைச்சர் றிசார்ட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற வர்த்தக நிறுவனங்கள் இலங்கையின் சேவைகளை நாடுவது மிகவும் வரவேற்கத்தக்க விடயம், அந்தளவுக்கு உற்பத்தி நடவடிக்கைகளை அதியுயர் தரத்தில் பேணும் துறைசார் உற்பத்தியாளர்களின் பணிகள் போற்றுதற்குரியது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்த துறையின் வளர்ச்சிக்கும் நீண்ட கால செயற்பாட்டுக்கும் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். தற்போது அமுலிலுள்ள வரவுசெலவு திட்ட அறிக்கையிலும், ஆடைக்கைத்தொழில்துறையி;ன் வளர்ச்சிக்கு அரசாங்கம் தொடர்ச்சியான பங்களிப்பு வழங்கவுள்ளமை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் புத்தள பகுதியில் இடம்பெற்ற தேசத்தின் மகுடம் 2011 கண்காட்சியில் ஜாஃப் அமைப்பினால் (துயுயுகு) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காட்சி கூடத்துக்கு பெருந்திரளான பார்வையாளர்களின் வரவேற்பு கிடைத்திருந்தது. இந்த பகுதியை அண்டிய பிரதேசங்களிலிருந்து பல இளைஞர்கள் இந்த காட்சி கூடத்துக்கு வருகைதந்திருந்ததுடன், ஆடைக்கைத்தொழில்துறையில் வௌ;வேறு பதவிகளில் வேலைக்காக இணைந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதற்காக அவர்கள் சமர்ப்பித்திருந்த பெருமளவான விண்ணப்பங்கள் அந்தந்த நிறுவனங்களின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அலங்காரம், வடிவமைத்தல், வெட்டல், தைத்தல் போன்ற பல பிரிவுகளில் பணியாற்றுவதற்காக சுமார் 400000க்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை இந்த துறை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த பிராந்தியங்களில் வறுமை நிலையை இல்லாதொழிப்பதற்கும், வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் இந்த துறை பாரிய பங்களிப்பை வழங்கி வருகிறது.
'ஆடைக் கைத்தொழில் துறையானது தேசிய பெரருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்தும் பிரதானமான துறையாகும். மேலும் உள்நாட்டிலும், சர்வதேச சந்தையிலும் கொள்வனவாளர்களை பெரிதும் கவர்ந்த ஒரு துறையாகும், ஜனாதிபதி அவர்கள் தனது வரவுசெலவு திட்ட உரையில் குறிப்பிட்டிருந்ததை போன்று 2015ஆம் ஆண்டளவில் இந்த துறை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டும் என எதிர்பார்க்கிறேன்' என அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.
மேலும், இந்த துறையில் இளைஞர்களை இணைந்து கொள்ள வருமாறும், 23 மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரே துறை இதுவென்றும், தொழிற்சாலைகளை நிறுவுவதன் மூலம் பிரதேசங்களின் அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்கும் ஒரே துறையாக இந்த ஆடைக்கைத்தொழில் துறை அமைந்துள்ளமையையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த துறையினால் தற்போது முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு திட்டத்தின் மூலம் இந்த துறையை மேலும் வளர்ச்சியடையச் செய்து தேசிய பொருளாதார வளர்ச்சியில் பங்களிப்பு வழங்க திட்டமிட்டுள்ளது.
7 minute ago
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
55 minute ago
2 hours ago