2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

ஆர்பிகோவின் 'முழு வருடத்துக்கும் புதுவருடம்' பரிசு

A.P.Mathan   / 2011 ஜூன் 08 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் - சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு ஆர்பிகோ சுப்பர் சென்டர் மூலம் நடத்தப்பட்ட 'முழு வருடத்துக்கும் புதுவருடம்' திட்டத்தில் பரிசு வென்றவர்களுக்கு அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு அண்மையில் வத்தளை ஆர்பிகோ சுப்பர் சென்டரில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக றிச்சர்ட் பீரிஸ் டிஸ்ரிபியுட்டர்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அன்ட்ரூ டால்பி கலந்து கொண்டிருந்தார்.

வருடம் முழுவதும் தமது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான, புதுமையான ஷொப்பிங் அனுபவத்தை வழங்கும் ஆர்பிகோ சுப்பர் சென்டர் இம்முறை தமிழ் சிங்கள புது வருடத்தை முன்னிட்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி வரை நாடு பூராகவும் காணப்படும் தனது அனைத்து ஆர்பிகோ சுப்பர் சென்டர் கிளைகளிலும் 'முழு வருடத்துக்கும் புதுவருடம்' அன்பளிப்பு திட்டத்தை முன்னெடுத்திருந்தது. இந்த அன்பளிப்பு திட்டத்தின் முதல் பரிசாக வருடம் முழுவதும் ஆர்பிகோ சுப்பர் சென்டரில் இலவசமாக ஷொப்பிங் செய்யும் வாய்ப்பு வழங்கப்பட ஏற்பாடாகியிருந்தது.

இந்த அன்பளிப்பு திட்டத்திற்காக சுமார் 300,000 இற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்திருந்ததுடன், குலுக்கல் முறை மூலம் 37 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்கள் தெரிவு செய்யப்பட்டு மாதமொன்றுக்கு 15,000 ரூபா வீதம் வருடமொன்றுக்கு இலவசமாக பொருட்கொள்வனவில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அத்துடன் இந்த அன்பளிப்பு திட்டம் நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் சுமார் 2000 இற்கும் அதிகமான உடனடிப் பரிசில்களும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.

இந்த அன்பளிப்பு திட்டத்துக்கு தகுதிபெற வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியிருந்தது குறிப்பிடப்பட்ட மூன்று பொருட்கள் உள்ளடங்கலாக ஒரே தடவையில் 3000 ரூபாவுக்கு குறையாமல் பொருட்களை கொள்வனவு செய்வதாகும்.

இந்த அன்பளிப்பு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு றிச்சர்ட் பீரிஸ் டிஸ்ரிபியுட்டர்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அன்ட்ரூ டால்பி கருத்து தெரிவிக்கையில் 'சுமார் ஒருதசாப்த காலத்துக்கு முன்னர் இலங்கையில் ஆர்பிகோ சுப்பர் சென்டர் நிறுவப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக எமது வாடிக்கையாளர்களுக்கு புதுமையானதும், களிப்பானதுமான அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த சேவைகளும் அனுபவமும் சென்றடையக் கூடிய நடவடிக்கைகளை தற்போது நாம் மேற்கொண்டு வருகிறோம்' என்றார்.

இந்நிகழ்வில் ஆர்பிகோ சுப்பர் சென்டர்சின் விநியோக நடவடிக்கைகளுக்கான முகாமையாளர் அவந்தி த சொய்சா கருத்து தெரிவிக்கையில், 'தினந்தோறும் புதிய சிந்தனைகளை தோற்றுவிக்கும் ஆர்பிகோ சுப்பர் சென்டர், வருடாந்தம் வரும் இரண்டு பிரதான கொண்டாட்டங்களை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பெருமளவான சலுகைகளையும், அன்பளிப்புகளையும் வழங்குவதுண்டு' என்றார்.

புத்தம் புதிய ஆர்பிகோ சுப்பர் சென்டர் கிளை அண்மையில் கடவத்தை பகுதியில் திறந்து வைக்கப்பட்டிருந்ததுடன், ஹைட்பார்க் கோர்னர், தெஹிவளை, பத்தரமுல்லை, நாவின்ன, கம்பஹா, நீர்கொழும்பு, கிரிபத்கொடை, வெள்ளவத்தை, பொரல்லஸ்கமுவ மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளில் கிளைகளை கொண்டுள்ளது. இந்த அனைத்து கிளைகளும் பெருமளவான இடவசதிகளை கொண்டிருப்பதுடன், சுமார் 45,000 இற்கும் அதிகமான வௌ;வேறு பொருட்களை விற்பனைக்காக கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X