Suganthini Ratnam / 2011 ஜூன் 22 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.விவேகராசா)
வவுனியாவில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் 250ஆவது கிளை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலால் இன்று புதன்கிழமை காலை வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது
100சத வீதம் அரசாங்க வங்கியான இதன் வடமாகாணத்தற்குரிய முதலாவது கிளை வவுனியாவில் திறந்துவைக்கப்பட்டுள்ளதாக வங்கியின்; தலைவி ஜனாக குறுப்பு தெரிவித்தார்
நாடாளாவிய ரீதியில் திறக்கப்பட்டபோதிலும், கிழக்கில் இரண்டு கிளைகள் எற்கனவே திறக்கப்பட்டுள்ளன. வடமாகாணத்தில் மேலும் 10 கிளைகளை திறக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். வங்கியின் பொதுமுகாமையாளர் ஆர்.சிறிவர்த்தன, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.எஸ்.சாள்ஸ் மற்றும் வாடிக்கையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்
வலம்புரிச் சங்கை சின்னமாகக் கொண்ட இந்த வங்கியானது நம்பிக்கையுள்ள இலங்கையருக்காக உதவியளிக்க காத்துள்ளதாக வங்கி அதிகாரியொருவர் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
27 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
3 hours ago
4 hours ago