Kogilavani / 2011 செப்டெம்பர் 22 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில், பசும் பால் உற்பத்தி வீதம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இவ்வருடம் அதீத வளர்ச்சி கண்டுள்ளதாக மாவட்ட மில்கோ பணிப்பாளர் கே.கனகராஜா தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் பால் உற்பத்தியானது ஒரு நாளைக்கு 7700லீற்றர் பெறப்பட்டது. ஆனால் இவ்வருடம் ஒரு நாளைக்கு 14000லீற்றர் பெறப்படுகின்றது. அதேபோல் விலையிலும் அதிகரிப்பு காணப்படுகின்றது.
கடந்த வருடம் ஒரு லீற்றர் பாலின் விலை 36 ரூபாயாக இருந்தது. இவ் வருடம் 56ரூபாவாக அதிகரித்துள்ளது. இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பண்னையாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தில் வளர்ச்சிக் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
25 minute ago
31 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
31 minute ago
48 minute ago