Editorial / 2025 நவம்பர் 26 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா, கிரிக்கெட் உலகில் சந்தித்த அனுபவங்களையும், சிறுவயதிலிருந்தே எதிர்கொண்ட சவால்களையும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டு பெரும் வரவேற்பைப் பெற்றார்.
சமீபத்தில் மகளிர் உலகக் கோப்பையை வென்று நாட்டை பெருமைப்படுத்திய அவர், பிசிசிஐ வழங்கும் சிறந்த மகளிர் சர்வதேச கிரிக்கெட் வீரர் விருதையும் கைப்பற்றியிருந்தார். 2023ஆம் ஆண்டு வினாடி-வினா ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘கௌன் பனேகா குரோர்பதி 15’ இல் ஸ்மிருதியும், ஆண்கள் அணியின் இஷான் கிஷனும் கலந்து கொண்ட எபிசோடில் தொகுப்பாளர் அமிதாப் பச்சன், கிரிக்கெட்டில் அவரது பயணத்தை பற்றி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஸ்மிருதி மந்தனா கூறியதாவது: “என் தந்தையும் சகோதரரும் சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் ஆர்வலர்கள். என் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனா ஒருகாலத்தில் கிரிக்கெட் விளையாட விரும்பினார். ஆனால் அவருக்கு குடும்பத்தினர் முழுமையான ஆதரவு அளிக்கவில்லை. தனது இரண்டு குழந்தைகளும் கிரிக்கெட்டில் முன்னேற வேண்டும் என்பதே அவரது கனவு. அதிலும் ஒருவர் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே அவரது மிகப்பெரிய ஆசை.”
சாங்லி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்மிருதியின் தந்தை மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன் சிறுவயது பற்றியும் ஸ்மிருதி கூறினார்:
“நான் பிறக்குமுன்பே கூட கிரிக்கெட்டின் சத்தத்தைக் கேட்டு வளர்ந்திருக்கிறேன் என்று தான் நினைக்கிறேன். என் சகோதரர் ஷ்ரவண் பந்து வீசும் போது, அவருக்கு பந்தை எடுத்து தர நான் பயிற்சிக்கு செல்லுவேன். வலைப்பயிற்சியில் அவர் விளையாடுவதைக் கண்டு நான் பேட்டிங் கற்றுக்கொண்டேன்.”
அதிலும் தன்னை இடதுகை பேட்ஸ்மேனாக்கியது எப்படி என்ற ஆர்வத்திற்குரிய விஷயத்தையும் பகிர்ந்தார்: “உண்மையில் நான் வலது கை வீராங்கனை. ஆனால் என் சகோதரர் இடது கை வீரர். அவரின் விளையாட்டைப் பின்புறம் நின்று கவனித்தபடி நான் விளையாடத் தொடங்கியதால், நானும் இடதுகை விளையாட்டைத் தானாகவே கற்றுக் கொண்டேன்.”
இதற்குப் பிறகு நிகழ்ச்சியில் நடிகர் அமிதாப் பச்சன் நகைச்சுவையாக, “ஒரே வீட்டில் வலது கை–இடது கை சேர்க்கை என்றால் அது சகஜம் தான்!” என்று குறிப்பிட்டதுடன் தருணம் சிரிப்பை கிளப்பியது.
22 minute ago
28 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
28 minute ago
45 minute ago