2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

முதலாவது முழுமையான ஆடைகளின் தொகுதியை அறிமுகப்படுத்தும் ஹமீடியா

A.P.Mathan   / 2011 ஒக்டோபர் 17 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் ஆண்கள் ஆடைத்துறையில் நிபுணத்துவம் பெற்ற முன்னணி நிறுவனமான ஹமீடியா, தனது முதலாவது முழுமையான 'ஆடைகளின் தொகுதி' (Wardrobe) இனை அறிமுகப்படுத்தியுள்ளது. அனுபவம்பெற்ற கிரிக்கெட் வீரரான அஞ்சலோ மெத்தியூஸ் ஆடுகளத்தில் வெளிப்படுத்திய சிறப்புத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், அவருக்கு இந்த முழுமையான ஆடைகளின் தொகுதியை ஹமீடியா வழங்கி கௌரவித்துள்ளது. இதற்கமைய ஹமீடியா நிறுவனத்தினால் மெருகூட்டப்பட்ட Wardrobeஇனை பயன்படுத்தும் முதலாவது நபராக மெத்தியூஸ் திகழ்கின்றார்.

இந்நிகழ்வு கொழும்பு, கிரஸ்கட் போல்வர்ட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கூட்டாண்மை நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், நலன்விரும்பிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பெருந்தொகையானோர் பிரசன்னமாகியிருந்தனர்.

Wardrobe என்ற பெயர் குறிப்பிடுவதைப் போலவே, பல்வேறுபட்ட வைபவங்களில் தமது நிறுவனங்களையும் மற்றும் தம்மை சுயமாகவும் பிரதிநிதித்துவம் செய்யும் அதேநேரம், இவ்வாறான அனைத்து வேளைகளிலும் மிகவும் கச்சிதமாக ஆடை அணிந்திருக்க வேண்டுமென்று விரும்புகின்ற நவீனகால கூட்டாண்மை அதிகாரிகளை இதிலுள்ள தெரிவுகள் இலக்காகக் கொண்டுள்ளன. சொற்ப நேரத்தில், சௌகரியமான வகையில் ஆடைகளை தேடி எடுத்துக் கொள்ளக்கூடிய வசதி உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் (அலுமாரி வடிவிலான) இந்த 'ஆடைகளின் தொகுதி' இல் காணப்படுகின்றன.

இந்த 'ஆடைகளின் தொகுதி' ஆனது, Platinum மற்றும் Gold என்ற இரு தெரிவுகளைக் கொண்டுள்ளது. Platinum ஆனது, Georgio Armani, Hugo Boss போன்ற சர்வதேச வர்த்தக குறியீடுகளுக்கு இணையான முதற்தர மற்றும் சொகுசு ஆடைத் தெரிவுகளை உள்ளடக்கி உள்ளது. மறுபுறத்தில் Gold ஆனது, உயர்தரமான அதேநேரம் பணத்திற்கு பெறுமதியை வழங்கும் ஆடைத் தெரிவுகளை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. இவ்விரு தெரிவுகளிலான ஆடைகளின் தொகுதிகளும் என்வோய், FH, லீ பொன்ட் போன்ற வர்த்தக குறியீPடுகளைக் கொண்ட ஆடைகள் மற்றும் வன் ஹியுசன், லுயிஸ் பிலிப்பி;, பார்க் எவனியு, அடிடாஸ் போன்ற பல சர்வதேச வர்த்தக குறியீPடுகளையும் கொண்டவையாக அமைந்துள்ளன. இதற்கு மேலதிகமாக அனைத்து நிகழ்வுகளுக்கும் பொருத்தமான அணிகலன்கள் மற்றும் பாதணிகளையும் (சம்பிரதாய, கசுவல், ஸ்மார்ட் கசுவல், பார்ட்டி, வைபவரீதியானவை) 'ஆடைகளின் தொகுதி' தன்னகத்தே கொண்டுள்ளது.

இலங்கையில் இவ்வாறான முதலாவது உற்பத்தியை பிரகடனப்படுத்துவதற்காகவும் அத்துடன் இந்த ஆடைகளின் தொகுதியை மேலும் பிரத்தியேகமானதாக அமைப்பதற்காகவும், எந்நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும் கூட்டாண்மை அதிகாரிகளுக்கான 'வடிவமைப்பு' மற்றும் குறித்த நபரது அலுமாரியை 'அவருக்குரியதாக' வடிவமைத்தல் ஆகிய விடயங்களில் இலங்கையின் மிகவும் வரவேற்பைப் பெற்ற ஆண்கள் ஆடை வடிவமைப்பாளரான பௌசுல் ஹமீட் தனிப்பட்ட ரீதியில் தன்னை ஈடுபடுத்தி செயற்பட்டுள்ளதுடன் ஒத்துழைப்புக்களையும் வழங்கியுள்ளார். இந்த 'ஆடைகளின் தொகுதி' நேரத்தை மீதப்படுத்துவது மட்டுமன்றி;, கடைசி நிமிடத்தில் ஆடைகளை தேடுவதிலுள்ள சிரமங்களையும் இல்லாது செய்கின்றது.  

ஹமீடியா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பௌசுல் ஹமீட் இந்நிகழ்வில் உரையாற்றுகையில், 'அஞ்சலோ மெத்தியூஸ் ஒரு நட்சத்திர அந்தஸ்து பெற்ற கிரிக்கெட் வீரராக இருப்பதற்கு அப்பால், தனக்கு எது பொருத்தமானது என்பதை நன்றாக உணர்ந்து கொண்டவராகவும் மிக நேர்த்தியாக ஆடை அணியும் ஆண்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் திகழ்கின்றார். சரியான நேரத்தில் சரியான ஆடையினை அணிவதன் மூலம், தான் போகும் இடங்களில் எல்லாம் இருப்போரை திரும்பிப் பார்க்க வைக்கும் போக்கினை கொண்டவராகவும் இவர் இருக்கின்றார். அவருக்கு வழங்கப்படும் இந்த 'ஆடைகளின் தொகுதி' (Wardrobe) ஆனது, ஆண்கள் ஆடைகள் தொடர்பான மெத்தியூஸின் புத்திக்கூர்மை மற்றும் சிறப்புத்துவத்தை மேலும் பலப்படுத்தும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை' என்றார்.

'என்னைப் போன்று எந்நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு ஆடைகளை கொள்வனவு செய்து கொள்வதற்கு எல்லோருக்கும் போல ஓய்வு நேரம் கிடைப்பதில்லை என்பதால், ஹமீடியாவில் இருந்து கிடைக்கப்பெறும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட 'ஆடைகளின் தொகுதி'  எனக்கு மிகவும் பயன்தரக்கூடியதாக அமையும். தன்னளவில் அதீத திறமை கொண்டவரான பௌசுல் ஹமீட், ஒருவரது Wardrobeஇனை பிரத்தியேகமாக வடிவமைப்பதற்காக தனது சர்வதேச நிபுணத்துவ ஆற்றலை உபயோகித்துள்ளதால் கூட்டாண்மை துறைசார்ந்தவர்கள் மற்றும் எந்நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற விளையாட்டு வீரர்களுக்கு இது நிச்சயமாக சாதகமானதாக அமையும்' என்று மெத்தியூஸ் குறிப்பிட்டார்.

இந்த 'ஆடைகளின் தொகுதி' ஆனது, நிபுணத்துவம் வாய்ந்த எண்ணம், ஒருவரது பௌதீக மற்றும் தனிப்பட்ட தன்மைகளுக்குப் பொருந்தக்கூடிய தோற்றப்பாடு, வீட்டுக்கான விநியோகம் போன்ற குறிப்பிடத்தக்க அம்சங்களுடன் பல்வேறுபட்ட அனுகூலங்களை வழங்குகின்றது. தேவைகள் ஏற்படும் வேளைகளில் முன்னாயத்தம் இன்றி கொள்வனவு செய்தல் மற்றும் ஒருவரது தேவையுடன் முற்றாக பொருந்திப் போகாத விற்பனைப் பிரதிநிதியுடன் உரையாடிக் கொண்டிருப்பதன் மூலம் பெறுமதியான நேரத்தை விரயமாக்கல் ஆகிய நடவடிக்கைகளையும் இது அவசியமற்றதாக்கி விடுகின்றது. ஒவ்வொரு நேரமும், எவ்வேளையிலும் ஒருவர் உறுதியான முதல் ஈர்ப்பினை வெளிப்படுத்துவதற்கு தேவையான சரியான கருவியை வழங்குவதன் ஊடாக இந்த 'ஆடைகளின் தொகுதி' அவருக்கு சக்தி அளிக்கின்றது.

வெள்ளவத்தை, காலி வீதியில் அமைந்துள்ள ஹமீடியாவின் பிரபலமான காட்சியறைக்கு விஜயம் செய்வதன் மூலம் Wardrobeஇல் உள்ள உற்பத்திகள் மற்றும் தெரிவுகளை 'அனுபவித்து' பார்க்க முடியும். துணி வகைகள், ஆடைகள், சேர்ட்கள், அவற்றின் வெட்டு, பொருத்தமான தன்மை மற்றும் நவநாகரிகம் போன்றவற்றை தொட்டுணர்ந்து பார்ப்பதற்கு வாடிக்கையாளர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம். சக்திமிக்க வகையில் ஆடை அணிதல் தொடர்பில் அவசியம் கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்து, இங்குள்ள பயிற்சியளிக்கப்பட்ட நவநாகரிக  வழிகாட்டிகள் ஆலோசனைகளை வழங்குவர். இது, அவர்கள் தமது ஆடை அணியும் முறைமையை 'மீள்-வரையறை' செய்து கொள்வதற்கு உதவி புரிவதுடன் இதன்மூலம் ஒட்டுமொத்தமான தோற்றப்பாட்டைப் பொறுத்தமட்டில் அவர்களை அடுத்த மட்டத்திற்கு கொண்டு செல்லவும் முடியும்;. எதிர்பார்ப்புள்ள கூட்டாண்மை துறைசார் அதிகாரிகள் இப்போது உதவித் தொலைபேசி சேவை (0777553344) ஊடாக அழைப்பினை ஏற்படுத்தி, அர்ப்பணிப்புமிக்க இந்த ஆடை வழங்கல் சேவையை பார்வையிடுவதற்காக முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

கடந்த காலங்களிலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரபலங்கள் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் பலருடன் ஹமீடியா நிறுவனம் ஒன்றிணைந்து செயற்பட்டுள்ளது. அவர்களுள் இலங்கையின் அரச அதிபர்கள், சச்சின் டெண்டுல்கார், முத்தையா முரளிதரன், ரொனி கிரேக், ரமீஸ் ராஜா மற்றும் முன்னாள் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு கலாநிதி பீற்றர் ஹெய்ஸ் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். இவர்களுக்கு மேலதிகமாக பல்வேறு பிரபலங்கள், இராஜதந்திரிகள் மற்றும் பிரபலமான அரசியல்வாதிகளுக்கும் ஹமீடியா நிறுவனம் சேவையாற்றியுள்ளது. ஈடுஇணையற்ற அசல் தன்மை மற்றும் தையற்கலை சிறப்புத்துவம் ஆகியவை தொடர்பில் ஹமீடியா நிறுவனம் கொண்டுள்ள தசாப்தங்கள் பழமைவாய்ந்த மரபினை இது வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.


  Comments - 0

  • Rashid Wednesday, 19 October 2011 07:13 PM

    ஹமிடியா இருக்க பயமேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .