2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

வர்த்தக செய்திகளை தமிழில் வழங்கும் இணையத்தளம் அறிமுகம்

A.P.Mathan   / 2011 டிசெம்பர் 01 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வர்த்தக செய்திகளை தமிழில் வழங்கிடும் வகையில், தமிழ் வர்த்தக இணையத்தளம் இலங்கையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் பேசும் மக்களுக்கு அன்றாடம் இலங்கையிலும், உலகளாவிய ரீதியிலும் இடம்பெறும் முக்கியமாக பொருளாதாரம் சம்பந்தமான விடயங்களை இலகுவாக அறிந்து கொள்ளக்கூடிய வகையில் இந்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

www.bntamil.com எனும் முகவரியில் இயங்கும் இந்த வர்த்தக செய்திகளுக்கான இணையதளம் பிஎன்ரி ஒன்லைன் நெற்வேர்க்ஸ் நிறுவனத்தின் மூலம் பராமரிக்கப்படுகிறது. தமிழ் மொழியில் இதுவரையில் வர்த்தக செய்திகளுக்கென தனித்துவமான இணையத்தளமொன்று உருவாக்கப்படாமலிருந்த குறை நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில், தமிழ் பேசும் மக்களுக்கு பொருளாதார, வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள், சந்தை நிலைவரங்கள் மற்றும் நம் நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள், நேர்காணல்கள் போன்ற வர்த்தகம் சார்ந்த பல பயனுள்ள விபரங்கள் இந்த இணையத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த இணையத்தளத்தின் செயற்பாடுகள் குறித்து பிஎன்ரி ஒன்லைன் நெற்வேர்க்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ ஆசிரியர் ச.சேகர் கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், முன்னேற்றகரமான சூழ்நிலை உருவாகியுள்ளது. பொருளாதார நிலையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலை பிரதான காரணமாக அமைந்துள்ளது. இவ்வாறு இலங்கையில் மற்றும் சர்வதேச நாடுகளில் நிலவும் பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தமிழ் பேசும் மக்களுக்கு உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்த புதிய www.bntamil.com இணையத்தளம் அமைந்துள்ளது. அத்துடன் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் வர்த்தக செய்திகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு இயங்கும் இணையத்தளங்கள் பல காணப்படுகின்றன. ஆயினும் தமிழ் மொழியில் இது போன்றதொரு முயற்சி முதல் தடவையாக எமது நிறுவனத்தின் மூலம் முன்னெடுக்கப்படுகிறது' என்றார்.

பாடசாலை மாணவர்கள், இளைஞர் யுவதிகள் மற்றும் வர்த்தகத்துறையுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் இலக்காகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த இணையத் தளத்திற்கு வாசகர்களும் தமது ஆக்கங்களையும், தமது வர்த்தகம் சம்பந்தமான செய்திகளையும் பிரசுரிக்க முடியும். இதற்காக பின்பற்ற வேண்டிய விபரங்கள் இணையத்தளத்தின் தொடக்கப்பக்கத்தில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரதாரர்களுக்கும் உச்ச பயனை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் வௌ;வேறு கட்டணங்களில், வெவ்வேறு அளவுகளில் தமது விளம்பரங்களை பிரசுரிப்பதற்கான வசதியும் இந்த இணையத்தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இணையத்தளத்தை www.bntamil.com எனும் இணையத்தள முகவரியினூடாக பார்வையிட முடிவதுடன், மின்னஞ்சல்களை sekar@bntamil.com, managingeditor@bntmail.com எனும் முகவரிகளுக்கு அனுப்புவதன் மூலமாகவும் தொடர்புகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0

  • karnika.u Monday, 05 December 2011 01:41 AM

    சேகர் அண்ணா நல்லா இருக்கு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .