2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

சுப்பர்மார்க்கெட்களின் மீதான வற் வரி குறித்து அதிருப்தி

A.P.Mathan   / 2012 நவம்பர் 20 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

2013ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள சுப்பர்மார்க்கெட்கள் மீதான வற்வரி அறவீடு தொடர்பான தீர்மானத்துக்கு சுப்பர்மார்க்கெட் உரிமையாளர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

இந்த 12 சதவீத வற் வரி முறை நடைமுறைப்படுத்தப்படுமாயின் ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல், சுப்பர்மார்க்கெட்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் மீதான வரி அதிகரிக்கப்படும் எனவும், இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வசதி கருதி சுப்பர் மார்க்கெட்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டு, சுப்பர் மார்க்கட்கள் நட்டத்தை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலைமை குறித்து இலங்கை நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் திறைசேரி செயலாளர் பி.பி. ஜயசுந்தரவுடன் கலந்தாலோசிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .