2025 ஜூலை 05, சனிக்கிழமை

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள பெல்ஜியம் ஆர்வம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 17 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த பெல்ஜியம் நாட்டின் வர்த்தக பிரமுகர்கள் குழாம், இலங்கையில் தகவல் தொழில்நுட்ப சேவைகள் சார்ந்த துறையில் தமது முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வமாக உள்ளதாக இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போது பெல்ஜியம் நாட்டின் முதலீடுகள் இலங்கையில் டயர் உற்பத்தி, மாணிக்கக்கல் வெட்டும் இயந்திர தயாரிப்பு மற்றும் சிகரெட் தயாரிப்பு போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இருநாடுகளுக்குமிடையில் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில் வரிச்சலுகை, ஏற்றுமதி பாதுகாப்பு குறித்த விடயங்கள் உள்ளடங்கிய உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .