2021 ஜனவரி 27, புதன்கிழமை

பாவனையாளர்களுக்கு அசல் மென்பொருள்களை வழங்கும் பார்க்ளேஸ்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 26 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை தகவல் தொழில்நுட்;ப சந்தையில் அசல் மென்பொருள்களை விற்பனை செய்து வருவதில் பார்க்ளேஸ் கம்யூட்டர் தனியார் நிறுவனம் முன்னிலை நிறுவனமாக திகழுகின்றது. 

மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்காவின் கூட்டு வர்த்தக நிறுவனமான பார்க்ளேஸ் கம்யூட்டர் நிறுவனத்தின் கிளை யுனிட்டி ப்ளாஷாவில் அமைந்துள்ளதுடன் நிறுவனம் தனது சேவையை 1994ஆம் ஆண்டு முதல் பாவனையாளர்களுக்கு வழங்குகின்றது.

கணினித்துறை அனுபவசாலிகளான நிறுவனம் கணினி விற்பனை, விற்பனையின் பின்னரான சேவை, கணினி திருத்தம், தகவல் தொழில்நுட்ப புள்ளி விபரங்கள் போன்ற சேவைகளை 80இற்கும் அதிகமான பயிற்றுவிக்கப்பட்ட திறமையான ஊழியர்களை கொண்டு நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பார்க்ளேஸ் கம்யூட்டர் நிறுவனம் தொடர்பில் முகாமைத்துவப் பணிப்பாளர் எப்.எம்.நலீம் கருத்து தெரிவிக்கையில், 'அதிக முதலீடுகள் செய்வதன்மூலம் எமது பாவனையாளர்களுக்கு தேவையான நவீன தொழில்நுட்ப உற்பத்திகளை வழங்கக் கூடியதாக உள்ளது. எமது பாவனையாளர்கள் அசல் மென்பொருள்களை பயன்படுத்த வேண்டும் என்பதையே நாம் ஊக்குவிக்கின்றோம். தகவல் தொழில்நுட்ப உலகில் போலி மென்பொருள்களை பயன்படுத்துவது தொடர்ச்சியான பிரச்சினையாக உள்ளது. அசல் மென்பொருள்களை பயன்படுத்துவதால் மாத்திரமே இப்பிரச்சினையை தடுக்க முடியும்.  அசல் மென்பொருள்களை தேர்ந்தெடுப்பதன்மூலம் பாவனையாளர்களுக்கு மைக்ரோசொப்ட் உற்பத்தி மற்றும் சேவைகளை அடையக்கூடிய வசதி வாய்ப்புக்கள் இலவசமாக கிடைக்கின்றது' என்றார். 

'எமது நிறுவனம் Windows8 உற்பத்திகளை யுனிட்டி ப்ளாஷாவில் முதலில் அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் எமது பாவனையாளர்களுக்கு Windows8 அனுபவங்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. அத்துடன் நாங்கள் MegaBox கணினிகளை ஓர் ஊக்குவிப்பு முறையாக வைத்திருந்ததுடன் Windows7 கணினிகளை கொள்வனவு செய்பவர்களுக்கு குறைந்த செலவில் Windows8 Upgrade வசதியை ஏற்படுத்தி கொடுத்திருந்தோம். Ms Office தயாரிப்புக்களான Home & Student, Home & Business , Ms office Professional Versions ஆகியவற்றின் அசல் தயாரிப்புக்கள் எம்மிடம் உள்ளன' என சுட்டிக்காட்டினார். 

இலங்கையின் கிராமப்புறங்களில் கணினியை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய நலீம் சில கிராமங்களில் மின்சார வசதியோ, இணையத்தள வசதியோ, கணினி ஆய்வுக்கூட வசதியோ, உரிய முறையில் பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களோ கிடையாது. இலங்கையில் 50 வீதத்துக்கும் அதிகமான வீடுகளில் கணினிகள் கிடையாது. அதனை அதிகரிக்க முடியும் என நம்புகின்றோம் என குறிப்பிட்டார்.

பார்க்ளேஸ் நிறுவனம் தொடர்பாக கருத்து தெரிவித்த மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்காவின் OEM பணிப்பாளர் பூஜித ராஜபக்ஸ, 'அசல் மென்பொருள்களை விற்பனை செய்வதை தமது கொள்கையாக பார்க்ளேஸ் கொண்டுள்ளது. நாட்டின் அறிவுசார் சொத்துடமை உரிமையை பாதுகாக்க நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. எம்முடன் இணைந்து நீண்டநாட்கள் இந்நிறுவனம் பணியாற்று வருகின்றது. அசல் மென்பொருள்கள் மூலம் நிறுவனம் பாவனையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்;கி வருகின்றது' என கூறினார்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .