2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

உலக சந்தையில் தங்கத்தின் விலை சரிவு

Kogilavani   / 2013 ஜூலை 26 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நேற்றைய கொடுக்கல் வாங்கல்களின் போது அவுன்ஸ் ஒன்று 1319.46 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது.

இது புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் 2 வீத சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பொருளாதார மீட்சி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்ததை தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக தங்கத்தின் விலையில் சற்று அதிகரிப்பை அவதானிக்க முடிந்தது.

ஆயினும், புதன்கிழமை வெளியாகியிருந்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பொருளாதார தரவுகள் இந்த சடுதியான வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளதாக சர்வதேச செய்திச் சேவைகள் அறிவித்துள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--