2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

வாடிக்கையாளர் கௌரவிப்பு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


இலங்கை வங்கியின் 74ஆவது ஆண்டு நிறைவையொட்டி அட்டாளைச்சேனை கிளையினால் புதிய கணக்கு அறிமுகமும், வாடிக்கையாளர் கௌரவிப்பு நிகழ்வும் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

வங்கியின் முகாமையாளர் ஐ.எம்.முனவ்வர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வங்கியின் உத்தியோகத்தர்கள், வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.

1939ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை வங்கியானது 74 ஆண்டு காலமாக மக்களுக்கான தொடர் சேவையினை வழங்கி வருகின்றது.

இன்று 600க்கு மேற்பட்ட கிளைகளையும், 500க்கு மேற்பட்ட பணபரிமாற்ற சேவை நிலையங்களினூடாகவும் அதன் சேவைகளை வழங்கி வருகின்றது.

மேலும் உலகிலுள்ள முதல் 1000 வங்கிகளில் இவ்வங்கியும் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது வங்கியாகும் என வங்கியின் முகாமையாளர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் 'றன் உல்பத்த' எனும் கணக்கினை 3ஜி எனும் திட்டத்தினூடாக அறிமுகப்படுத்தி வைத்து உரையாற்றுகையிலே முகாமையாளர் இவ்வாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--