2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

மைக்குரோஃசொப்ட் மொபைல் என நொகியா மொபைல் பெயர் மாற்றம்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகப்புகழ் பெற்ற நொகியா மொபைல் இந்த மாத இறுதி முதல் மைக்குரோஃசொப்ட் மொபைல் என பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது என சர்வதேச செய்திகள் அறிவித்துள்ளன.

கடந்த செப்டெம்பர் மாதம் நொகியாவின் சாதனங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் செயற்பாடுகளை மைக்குரோஃசொப்ட் கொள்வனவு செய்வதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த கொள்வனவு கொடுக்கல் வாங்கல்கள் பூர்த்தியடையும் நிலையை எய்தியுள்ள நிலையில், இந்த பெயர் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர் மைக்குரோஃசொப்ட் மொபைல் என மாற்றம் செய்யப்பட்ட போதிலும், கையடக்க தொலைபேசிகளின் பெயரில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கம் இல்லை என மைக்குரோஃசொப்ட் அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--