2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

உயர் வகை கோப்பி அறிமுகம்

Kanagaraj   / 2014 ஜூலை 03 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


உள்நாட்டில் வெளிப்புற உணவு மற்றும் பானவகைத் தீர்வுகளை வழங்குவதில் சந்தையில் முன்னிலை வகித்து வருகின்ற Nestle Professional  தனது புத்தம்புதிய உயர்வகை கோப்பி தீர்வான Nescafe Alegria வை அறிமுகப்படுத்தியுள்ளதன் ஊடாக இலங்கையில் உயர்வகை கோப்பித் தீர்வுகள் சந்தையில் புரட்சிகரமான மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது.

Nescafe Alegria  கோப்பி தீர்வானது சௌகரியம், பல்துறை சிறப்பம்சம் மற்றும் தரம் ஆகியவற்றை கொண்டுள்ள ஒரு புத்தம் புதிய, புத்தாக்கத்துடனான கோப்பி வழங்கள் தீர்வாக உலகில் முதன்மை வகிக்கும் கோப்பி வர்த்தக நாமமான Nescafe அனைத்து அத்தியாவசியமான சிறப்பம்சங்களைகளையும் ஒருங்கே கொண்டுள்ளது. மிகவும் தீவிரமான கோப்பி பிரியர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இது Espresso, Americano, Cappuccino, Latte Macchiato மற்றும் Lungo ஆகிய கோப்பியை அடிப்படையாக கொண்டு ஐந்து பானவகைகளை வழங்குவதுடன்  மேலும் ஐஸ் கோப்பி மற்றும் Frappe  இற்கான அடிப்படை மூலத்தையும் வழங்குகின்றது.

புத்தம் புதிய இந்த பத்தாக்கம் தொடர்பில் Nestle Professional  நிறுவனத்தின் உதவித்தலைமை  அதிகாரியான ஜெகத் வெதகே  அவர்கள் கருத்து தெரிவிக்கையில் வழமையான கோப்பி நுகர்வோர் மத்தியில் மாற்றங்களுடனான  வளர்ச்சியை நாம் எமது கண்கூடாக காணமுடிகின்றது. அண்மைக்காலங்களில் cafe மையங்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்து வந்துள்ளது. நுகர்வோர் கோப்பியை சுவைத்து மகிழும் போது அதன் தனிச்சிறப்பை நாடும் போக்கு அதிகரித்துச் செல்கின்றது.

Nescafe Alegria கோப்பி தீர்வானது மரபுரீதியான கோப்பி இயற்திரம் வழங்கும் அதே நன்மைகளை கொண்டுள்ளதுடன் எளிமையான தொழிற்பாட்டு முறை மற்றும் இணையற்ற தயாரிப்பு நேரம் உண்மையான உயர்தர கோப்பியின்  சுவை அனுபவத்தை வழங்குகின்றது.  இதன் மூலமாக cappuccino ஒரு நிமிடத்திற்குள் தயாரித்துக்கொள்ள முடியும் cafe style coffe made magically simple என்ற அதன் உறுதிமொழிக்கு அமைவாக Nescafe Alegria உயர்வகை கோப்பி தீர்வானது உள்நாட்டு பானவகை தொழிற்துறையில்  புரட்சிகரமான மாற்றங்களுக்கு வித்திடவுள்ளது என நாம் நம்புகின்றோம்.

Nescafe Alegria  கோப்பி இயந்திரத்தை இயக்குவதற்கு முன் அனுபவம் தேவையில்லை. மின் இணைப்புடன் செருகி  சுலபமாக இயக்கும் முறையை உயர்வகை கோப்பியை தயாரிப்பதிலுள்ள சிக்கலான நடைமுறைகளை வெறுமனே பட்டன் ஒன்றை அழுத்துவதன் மூலமாக  மேற்கொள்ளும் சௌகர்யத்தை வழங்குகின்றது.

அளவில் அடக்கமானதாகவும் இலகுவான பாவனை முறையையும் கொண்டுள்ள Nescafe Alegria கோப்பி பெட்டியின் ஊடாக உயர் வகையும் தரமும் கொண்ட  நேர்தியான கோப்பியை பெற்றுக்கொள்ள் முடியும். 15 மாதங்களுக்கு நீடித்து உழைக்கின்ற தட்டுக்களை கொண்டுள்ள இந்த உறைந்த, உலர்ந்த  மற்றும் நன்றாக அரைக்கப்பட்டுள்ள கோப்பியை கொண்டுள்ளதுடன் ஜப்பான் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்தொழில்நுட்பம் உண்மையான கோப்பியின் நறுமணத்தையும்  சுவையையும் அள்ளித்தருகின்றது.

தற்போது சந்தையில் உறுதியான ஸ்தானத்தை கொண்டுள்ள Nestle Professional  நிறுவனம் Nescafe Alegria இயந்திரத்தின் அறிமுகத்துடன்  அதனை மேலும் அதிகரித்து கொள்வதுடன், உயர்வகை Barista கோப்பி அனுபவத்தை நுகர்வோருக்கு வழங்கும் முயற்சியின் முதற்படியாகவும் இது அமையப்பெற்றுள்ளது. நுகர்வோரின் விருப்பு வெறுப்புகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விரிவான ஆய்வுகளை தொடர்ந்து இந்த கோப்பி தீர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு நுகர்வோரின் தனிப்பட்ட உபயோகம் மற்றும் உணவகங்கள் மற்றுமு; ஹோட்டல்கள் போன்ற வெளிப்புற தொழிற்பாட்டாளர்கள் என இரு வகையான தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதியுச்ச எளிமைத்தன்மையுடன்  மகத்தான சுவை கொண்ட அதி உயர் வகை கோப்பியை வழங்குவதில் Nescafe Alegria ஒரு மூலகாரணம் என்பதை நிருபிக்குமென நாம் நம்புகின்றோம் என நெஸ்லே லங்கா பீ.எல.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரான கணேசன் அம்பலவாணர் அவர்கள் குறிப்பிட்டார்.

1998 ஆம் ஆண்டில்  முதன் முறையாக Nescafe சூடான பால் பானத்தை வழங்கல் இயந்திரத்தை   அறிமுகப்படுத்தியிருந்த Nestle Professional மகத்தான சுவை கொண்ட  கோப்பி  மற்றும் ஈடு இணையற்ற சேவை தர நடைமுறை ஆகியவற்றுடன் நுகர்வோரை  தொடர்ச்சியாக பூரிப்படைய செய்துள்ளது. Nescafe Alegria இன் அறிமுகத்துடன் இலங்கையில் உயர்வகை  கோப்பித் தீர்வுகளை வழங்கவேண்டும் என்ற தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதுடன்  மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் சாத்தியமான  கொடுப்பனவுத் தீர்வுகள் மூலமாக Nescafe Alegria தளமேடையை மேலும் வலுவாக்கி, நுகர்வோரின் வாழ்க்கைத்தரத்தை  மேம்படுத்துவதில் இன்னும் அதிகமானவற்றை சாதிப்பதற்கு வழிகோலுதல்  என்ற தனது நோக்கத்தை  தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .