2025 ஜூலை 12, சனிக்கிழமை

மில்க்மெயிட் பேஸ்புக் ஆர்வலர்களுக்கு கிடைத்த வாய்ப்பு

A.P.Mathan   / 2015 பெப்ரவரி 04 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மில்க்மெயிட், இலங்கையில் அனைத்து இல்லங்களிலும் இனிப்பு ஆகாரங்களைத் தயாரிப்பதில் விருப்பத்திற்குரிய தெரிவாகத் திகழ்ந்துவருகின்றது. உள்நாட்டில் புகழ்பெற்ற சமையல் கலை நிபுணரும், Sponge pastry shop உணவகத்தின் உரிமையாளருமான அகாந்த பண்டிதசேகர அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பொன்றை அது தனது பேஸ்புக் ஆர்வலர்களுக்கு வழங்கியிருந்தது. நிகழ்வில் சுவையான ஆகாரங்கள் உட்பட அவர்கள் தமது பிற்பகல் பொழுதை இனிமையாகக் களித்திருந்தனர்.   

தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் ஆர்வலர்கள் பக்கத்தை 2013 இல் மில்க்மெயிட் ஆரம்பித்திருந்தது. ஆர்வமூட்டுகின்ற செயற்பாடுகள் மூலமாக நுகர்வோருடனான தொடர்புகளை மேம்படுத்தும் முயற்சிகளை இதன் மூலமாக முன்னெடுத்துவருகின்றது. மேலும் ஆர்வலர்கள் மில்க்மெயிட் தொடர்பான தமது அனுபவங்களை இணையத்தளத்தின் மூலமாக ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்வதையும் அது ஊக்குவித்துவருகின்றது. 

இந்நிகழ்வில் பங்குபற்றியவர்களுக்காக சமையற்கலை நிபுணரான அகாந்த அவர்கள் சமையல் செயன்முறை விளக்கமொன்றை நிகழ்த்தியிருந்தார். மேலும் சுவைமிக்க இனிப்பு ஆகாரங்களைத் தயாரித்தல் அடங்கலாக, மில்க்மெயிட் இனை உபயோகித்து வீட்டில் தயாரிக்கக்கூடிய இனிப்பு ஆகாரங்களை தயாரிக்கும் முறைகள் தொடர்பான பயன்மிக்க குறிப்புக்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.  

நெஸ்லே லங்கா நிறுவனத்தின் பாலை மூலப்பொருளாகக் கொண்ட உற்பத்தித் துறையின் உதவித் தலைமை அதிகாரியான ருவான் வெலிக்கல அவர்கள் கூறுகையில் 'சமையற்கலை நிபுணரான அகாந்த போன்ற தொழில்சார் நிபுணர் ஒருவரின் வழிகாட்டலின் கீழ் எமது மில்க்மெயிட் ஆர்வலர்கள், இனிப்பு ஆகாரங்களைத் தயாரிக்கும் தமது திறமைகளை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில் அவரை நோடியாகச் சந்திப்பதற்கு வாய்ப்பொன்றை ஏற்படுத்தியமை எமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது. பிரபலமான சமூக ஊடக வலைத்தளமான பேஸ்புக் ஊடாக மில்க்மெயிட் நுகர்வோருடன் நாம் இடைத்தொடர்புகளைப் பேணிவருகின்றோம். கடந்த இரு ஆண்டு காலப்பகுதியில் இனிப்பு ஆகாரப் பிரியர்கள் தாம் அவற்றைத் தயாரிக்கும் செயன்முறைகளையும், பயனுள்ள தகவல்களையும் மிகுந்த ஆர்வத்துடன் இணையத்தளத்தினூடாக பகிர்ந்துகொண்டு மில்க்மெயிட் பேஸ்புக் பக்கத்தின் செயற்பாடுகளை கணிசமான அளவில் அதிகரிக்க உதவியுள்ளனர். எதிர்வரும் நாட்களில் இன்னும் பல ஆர்வமூட்டுகின்ற செயற்பாடுகள் மற்றும் புத்தாக்க வழிமுறைகள் மூலமாக எமது நுகர்வோரின் வாழ்வினை மேம்படுத்தவேண்டும் என்பதை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்' என்று குறிப்பிட்டார். 

மில்க்மெயிட் பல தலைமுறைகளாக பல்வேறுபட்ட இனிப்பு ஆகாரங்களைத் தயாரிப்பதற்கான சேர்க்கைப்பொருளாகத் திகழ்ந்துவருகின்றது. அனைவரின் நம்பிக்கையையும் வென்றெடுத்து, முற்றுமுழுதாக உள்நாட்டில் கொள்வனவு செய்யப்படுகின்ற பாலை மட்டுமே உபயோகித்து உற்பத்திசெய்யப்பட்டுவருகின்றது. செழுமையும், பாற்சுவையும் நிறைந்த மில்க்மெயிட் இலங்கையில் அனைத்து இல்லங்களிலும் சுவைமிக்க இனிப்பு ஆகாரங்கள், பானவகைகள் மற்றும் ஆகாரங்களின் மேற்பகுதியில் அழகுக்காகவும், சுவைக்காகவும் அலங்கரிக்கப்படும் உணவு என அனைவரின் நாவிற்கும் சுவையூட்டி அவர்களை பூரிப்பிற்குள்ளாக்கி வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .