2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

2019ஆம் ஆண்டின் இறுதி மொபிடெல் காஷ் பொனான்ஸா கோலாகலமாக நிறைவு

Editorial   / 2020 ஜனவரி 07 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுதும் உள்ள மக்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொண்டுதரும் மொபிடெல், அனைவரும் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த காஷ் பொனான்ஸா நிகழ்வின் கடந்த ஆண்டின் நவம்பர் மாத வெற்றியாளரான அலவ்வையைச் சேர்ந்த குசும்வதி தர்மசேனவுக்குப் புத்தம்புதிய Mercedes Benz கரைப் பரிசாகக் கையளித்தது.

புத்தம் புதிய Benz கார்களை வெற்றியாளர்களுக்கு பரிசாக வழங்கிடும் இந்தக் காஷ் பொனான்ஸா, இலங்கையில் அதிகமாக எதிர்ப்பார்க்கப்பட்ட,  மதிப்பு மிக்க லோயல்டி வெகுமானத் திட்டமாக, தமது அடையாளத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது. மேலும் நாளாந்த, காலாண்டு சீட்டிழுப்புக்கள் மூலம் வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலிகளுக்கு ரூ. 190 மில்லியனுக்கும் அதிகமான தொகை பணப்பரிசுகளாக வழங்கப்பட்டது.

220,000 அதிர்ஷ்ட வெற்றியாளர்களுக்கும் ஒருவருக்கு தலா ரூ. 500 என்ற அடிப்படையில் வருடம் முழுவதும் வழங்கப்பட்டது. இது கவர்ச்சிகரமான சந்தைப்படுத்தல் கம்பெயினின் உதவியுடன் இவ்வாறான லோயல்டி வெகுமானத் திட்டங்களை மேற்கொள்ளும் ஒரே தொலைத்தொடர்பாடல் நிறுவனமாக மொபிடெலை மாற்றியுள்ளது.  

 இவ்வாண்டுக்கான காஷ் பொனான்ஸா வீரகெடிய ஜோர்ஜ் ராஜபக்‌ஷ பொது மைதானத்தில் மக்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொண்டுவந்நது. வீரகெடியவில் இடம்பெற்ற இந்த மொபிடெல் காஷ் பொனான்ஸா நிகழ்வானது பல தெரிவுகளைக் கொண்ட பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு மிக்க முன்னெடுப்புக்களையும் மேற்கொண்டது.  

நன்மதிப்பு பெற்ற மூக்குக் கண்ணாடி நிபுணர்களால் கண் பரிசோதனை நிகழ்த்தப்பட்டதுடன் 1000 மூக்குக் கண்ணாடிகளை உபஹார வாடிக்கையாளர்களினிடையே பகிர்ந்தளிக்கப்பட்டது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--