Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 16 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சி.குருநாதன்)
ஹட்டன் நஷனல் வங்கியின் வாடிக்கையாளர் சேவை நிலையமும் நுண்கடன் வழங்கும் நிலையமும் திருகோணமலை மாவட்டத்தில் சேருநுவர கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தின் இரண்டாவது நுண்கடன் வழங்கும் நிலையமும் கிழக்கு மாகாணத்தின் ஐந்தாவது நுண்கடன் வழங்கும் நிலையமும் இதுவாகும். அத்துடன் நாட்டின் 221ஆவது வாடிக்கையாளர் சேவை நிலையமும் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் ஏ.பி.எல்.பெர்னாண்டோ முதன்மை அதிதியாக கலந்து கொண்டு முதலாவது வாடிக்கையளரிடம் வைப்புப் பணத்தை பெற்றுக்கொண்டார். சேருநுவர பிரதேச சபையின் தலைவர் நந்தன விஜேசிங்கா, வங்கியின் கிழக்கு வலய சிரேஷட முகாமையாளர் ஏ.வி.பீடில் ஆகியோர் ஏனைய அதிதிகளாக கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வை ஒட்டி நான்கு சக்கர ட்ராக்டர்கள், இரண்டு சக்கர ட்ராக்டர்கள் கடனாக வழங்கப்பட்டன. பாடசாலை நூலகத்திற்கு புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. வறிய ஐந்து மாணவர்களுக்கு அவர்களின் பெயரில் வங்கியில் சேமிப்புக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு அதற்கான புத்தகங்கள் அவர்களிடம் கையளிக்கப்பட்டன.
15 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
29 minute ago