2021 ஜனவரி 20, புதன்கிழமை

29ஆவது வருடாந்த வணிக தடகள கூட்டத்திற்கு றிட்ஸ்பரி அனுசரணை

A.P.Mathan   / 2012 நவம்பர் 15 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


இம்மாதம் 17, 18ஆம் திகதிகளில் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள 29ஆவது வருடாந்த வணிக தடகள கூட்டத்திற்கு இவ்வருடமும் தனது பிரதான அனுசரணையை வழங்க றிட்ஸ்பரி வர்த்தக நாமம் முன்வந்துள்ளது. சொக்லட் தயாரிப்புத் துறையில் முன்னணியில் திகழும் றிட்ஸ்பரி வர்த்தக நாமமானது தொடர்ந்து மூன்றாவது வருடமாக பிரதான அனுசரணையை வழங்கி வருகிறது.

இவ்வணிக தடகள கூட்டத்தில் தனியார் துறையை சேர்ந்த அனுபவமற்ற, நிபுணத்துவம் வாய்ந்த, சாம்பியன் பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் ஆண், பெண் வேறுபாடின்றி கலந்து கொள்ள முடியும். இந்நிகழ்வானது தனியார் துறையை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச வணிக தடகள கூட்;டத்தில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

இவ்விரண்டு நாள் நிகழ்வுகளில் 312 நிகழ்ச்சிகளும்;, 1500 பங்கேற்பாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். 'இவ்வாண்டு தனியார் துறையை சேர்ந்த பணியாளர்களின் தடகள போட்டித் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்பையும், சர்வதேச அரங்கத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்பையும் வழங்கும் குறிக்கோளுடன் 45 நிறுவனங்கள் பங்கு கொள்ளும் என எதிர்பார்க்கின்றோம். இந்நிகழ்வை வருடாந்தம் முன்னெடுத்துச் செல்ல ஆதரவு வழங்கிவரும் சிபிஎல் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் தலைவரும், குழுமப் பணிப்பாளருமான நந்தன விக்ரமகே அவர்களிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என வணிக தடகள சம்மேளனத்தின் தலைவர் கிஹான் கண்டுலாவ தெரிவித்தார்.

மேலும் அவர் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் சிபிஎல் நிறுவனம் அனுசரணை வழங்கி வருவதை சுட்டிக்காட்டினார். இவ்வாண்டு தடகள விளையாட்டு துறையில் திறமையை வெளிப்படுத்திய பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த வேலையற்ற 5 விளையாட்டு வீரர்களுக்கு அனுசரணை வழங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளது. எமது சம்மேளனத்தின் மூலம் அவர்களிற்கு வேலைவாய்ப்பும், ஒரு வருடத்திற்கான உணவு, விளையாட்டு வசதிகளும் செய்து கொடுக்கப்படவுள்ளது. அவர்கள் மூலம் வெளிப்படுத்தப்படும் திறமைகளுக்கு ஏற்ப அடுத்த ஒரு வருடத்திற்கான அனுசரணை நீடிக்கப்படவுள்ளது.

இவ்வருட நிகழ்வுகளில் இலங்கையின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களான சுகத் திலகரத்ன, தமயந்தி தர்ஷா, சர்வதேச 100 மீற்றர் தடைத்தாண்டல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற காமினி வீரசிங்க மற்றும் இலங்கையின் நடப்பு உயரம் பாய்தல் போட்டியில் சிறந்த நேரத்தை பதிவு செய்தவரும், நிகழ்வின் பந்தம் ஏந்தி வருபவருமான பிரியங்கிகா மதுவந்தி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

'சர்வதேச தரத்திற்கமைய உருவாக்கப்பட்ட விளையாட்டரங்கு தடத்தின் அனுபவத்தை வழங்கும் நோக்கில் இவ்வாண்டின் நிகழ்வுகள் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் முன்னெடுக்க வணிக தடகள சம்மேளனம் முடிவு செய்துள்ளது' என வணிக தடகள சம்மேளனத்தின் செயலாளர் ட்ரொனேடோ ஜயசுந்தர தெரிவித்தார். மேலும் அவர் எதிர்வரும் 18ஆம் திகதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள பரிசு வழங்கும் நிகழ்வுகளில் அதியுயர் புள்ளியைப் பெற்ற குழுவிற்கு 'Ritzbury Challenge Trophy' வழங்கப்படவுள்ளது' என்றார்.

இப் பங்காண்மை குறித்து றிட்ஸ்பரி வர்த்தக நாமத்தின் உதவி சந்தைப்படுத்தல் முகாமையாளர் நிலுபுல் த சில்வா கருத்து தெரிவிக்கையில், மூன்றாவது வருடமாக வணிக தடகள சம்மேளனத்திற்கு அனுசரணை வழங்குவதையிட்டு பெரு மகிழ்ச்சியடைகிறோம் என்றார். பொது நிறுவனம் என்ற ரீதியில், எமது சமூக பொறுப்புணர்வுத்திட்ட இலக்குகளில்; மக்களுக்கு விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்த உதவுவதும்;, இத்தகைய நிகழ்வுகளுக்கு அனுசரணை வழங்கி விளையாட்டு வீரர்களின் திறமைகளை மேம்படுத்தவும், சிறப்பான முறையில் திறமையை வெளிப்படுத்தவும்; வழிவகுக்கிறது என்றார்.

அண்மையில் SLIM விருது வழங்கும் நிகழ்வுகளில் 'வருடத்திற்கான சிறந்த வர்த்தக நாமம்' என்ற விருதை வென்ற சீபிஎல் நிறுவனத்தின் முன்னணி சொக்லட் வர்த்தக நாமமான றிட்ஸ்பரியானது இலங்கையரின் விருப்பத்திற்குரிய தெரிவாக உள்ளது. சந்தையில் பல விதமான சொக்லட் வகைகளை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர், சிபிஎல் நிறுவனமானது குழந்தைகள் மத்தியில் இயற்கை வளங்கள், கலாசாரம், கலை, வன மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பாதுகாத்தல் குறித்த விழிப்புணர்வை வழங்கும் நோக்கில் 'றிட்ஸ்பரி ஜேர்னி டே' (Ritzbury Journey Day) நிகழ்ச்சியானது தயாரித்து ஒளிபரப்பு செய்யப்படுகிறது. றிட்ஸ்பரி வர்த்தக நாமத்தின் மூலம் 3ஆவது தடவையாக அனுசரணை வழங்கப்பட்டு வரும் இந்நிகழ்வானது தனியார் துறையை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு முன்னோடியாகவும், தங்களது திறமைகளை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமையும் என சிபிஎல் நிறுவனம் எதிர்பார்க்கின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .