2021 ஜனவரி 27, புதன்கிழமை

3 துறைமுகங்களில் தொழிற்சாலைகளை நிறுவ அரபு ராஜிய் 'கமீத் சகீல் அல் அக்கீலி' குழுமம் இணக்கம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 22 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

ஒலுவில் துறைமுகத்தில் சீமெந்து பொதி செய்யும் தொழிற்சாலையொன்றினையும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களையும் நிறுவுவதற்கு ஐக்கிய அரபு ராஜியத்தின் 'கமீத் சகீல் அல் அக்கீலி' குழும நிறுவனத்தினர் முன்வந்துள்ளனர்.

துறைமுக நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சரின் மேலதிக செயலாளர் அனுராத விஜயசேகரவுக்கும் ஐக்கிய அரபு ராஜியத்தின் 'கமீத் சகீல் அல் அக்கீலி' குழும நிறுவனத்தின் தலைவர் ஹுசைன் தாஹிர் தலைமையிலான குழுவினருக்குமிடையில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே மேற்படி தொழிற்சாலைகளை நிறுவதற்கான இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத்தின் அழைப்பின் பேரில் ஐக்கிய அரபு ராஜியத்தின் 'கமீத் சகீல் அல் அக்கீலி' குழும நிறுவனத்தினர் இலங்கைக்கு அண்மையில் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர். இதன்போதே, துறைமுக நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சரின் மேலதிக செயலாளருக்கும் ஐக்கிய அரபு ராஜிய நிறுவன குழுவினருக்குமிடையிலான சந்திப்பு இலங்கை துறைமுக அதிகாரசபையில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது, ஒலுவில் துறைமுக அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டதோடு, அங்கு சீமெந்து பொதி செய்யும் தொழிற்சாலை ஒன்றினை நிறுவுவது தொடர்பாகவும் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றன.

ஐக்கிய அரபு ராஜிய நிறுவனப் பிரதிநிதிகளுக்கும்  துறைமுக அதிகாரசபையினருக்கும் இடையிலான இந்தப்பேச்சுவார்தையில் கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீரும் கலந்து கொண்டார். இதேவேளை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய துறைமுகங்களில் எண்ணெய் சுத்திகரிப்பு

நிலையங்களை ஸ்தாபிப்பதற்கும், இவை தொடர்பான வேலைத்திட்டங்களை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.

இந்தச் சந்திப்பில், துறைமுக அபிவிருத்தி பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சரத் குமார மற்றும் துறைமுக அதிகார சபையின் தொழில்நுட்ப அதிகாரி தக்ட குணசேகர உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .