Super User / 2010 ஓகஸ்ட் 10 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜோன் கீல்ஸ் ஹேட்டேல் நிறுவனம் 200 அறைகளைக் கொண்ட 4 நட்சத்திர ஹோட்டல் ஒன்றை பேருவளை சீனன்கோட்டையில் அமைக்கவுள்ளது. "சாயா பே பேருவளை" என இந்த ஹோட்டலுக்கு பெயரிடப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ் ஆகியோர் தலைமையில் இடபெற்றது.
இந்த புதிய திட்டத்திற்கான முழுச் செலவு நிலம் உள்ளடங்களாக மூன்று பில்லியனாகும். இந்த ஹோட்டலின் நிர்மாணப் பணிகள் 2012 டிசம்பரில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுற்றுல்லா துறையின் மத்திய கேந்திரஸ்தானமாக பேருவளை காணப்படுகின்றது. இந்த ஹோட்டல் அமைக்கப்படுவதன் மூலம் தென் மாகாணத்தின் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
200 அறைகளைக் கொண்ட இந்த ஹோட்டல் பாரம்பரிய ஆசியாவின் கலாசாரங்களை உள்ளடக்கிய வகையில் அமைக்கப்படவுள்ளது. இந்த ஹோட்டல் நிர்மாண பணிகளுக்கு உள்நாட்டு பொருட்களும் நிர்மாணத் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படவுள்ளன குறிப்பிடத்தக்கதாகும்.
31 minute ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
18 Jan 2026