2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

6 பிராந்திய வங்கிகளையும் இணைத்து ஒரு பிராந்திய அபிவிருத்தி வங்கியாக மாற்றம்

Super User   / 2010 ஜூலை 17 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் உள்ள ஆறு பிராந்திய வங்கிகளையும் இணைத்து ஒரு பிராந்திய  அபிவிருத்தி வங்கியாக செயற்படுத்தப்படவுள்ளது.

கொழும்பில் அமையப்பெற்றுள்ள இதன் தலைமை காரியாலயத்தை நேற்று நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயலாளர் திறந்து வைத்தார்.

இவ்வாறு ஒரு வங்கியாக இணைக்கப்பட்டதன் பிரதான நோக்கம் சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதாகும்.

தற்போது இவ்வங்கிக்கு 42 பில்லியன் பெறுமதியான சொத்தும் நாடளாவிய ரீதியில் 251 கிளைகளும் உள்ளன. எதிர்வரும் மாதங்களில் இதன் கிளைகளை விரிவுபடுத்தவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னர் ரஜரட்ட, ருகுணு, வயம்ப, ஊவா, கந்துரட்ட மற்றும் சப்ரகமுவ ஆகிய ஆறு பிராந்திய வங்கிகள் காணப்பட்டன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--