2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

GIZ தொழிற்பயிற்சி திட்டத்துடன் JAT Holdings புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

Editorial   / 2020 மார்ச் 11 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

JAT Holdings சமூகங்களை மேம்படுத்துவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் இளைஞர்களுக்கு இலவச தொழில் பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன், தனது சமூகப் பொறுப்புணர்வு செயற்றிட்டங்களில் ஒரு பகுதியாக GIZ தொழிற்பயிற்சித் திட்டத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் சமீபத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இரண்டு செயற்பாட்டு நடைமுறைகளாகப் பிரிக்கப்பட்ட, GIZ தொழிற்பயிற்சித் திட்டத்தில் செயல்முறை அறிவுத்திறன் குன்றிய மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள இளைஞர்கள் அடங்கலாக அவர்களின் அறிவு, தொழில் ஆற்றல் மற்றும் வேலைவாய்ப்புக்கான திறனை வளர்ப்பதற்காகச் சம வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

நிறுவனத்தின் வர்த்தக மூலோபாயத்தின் மிக முக்கியமான உந்துசக்தி அம்சமாக மக்களை அங்கிகரிக்கின்ற JAT Holdings, மாணவர்களின் திறனை உயர் மட்டத்துக்கு மேம்படுத்த GIZ தொழிற்பயிற்சியுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதுடன், மாணவர்களை தொழில் மற்றும் உண்மையான உலக சவால்களுக்குப் பதிலளிக்கும் திறன் கொண்டவர்களாக மாற்றும் முயற்சியை முன்னெடுக்கின்றது. அனைத்து மட்டங்களிலும் தலைமைத்துவத்தை கடைப்பிடிக்கும் நீண்ட கால நோக்குடன், நிறுவனத்தினுள்ளும் அதற்கு அப்பாலும் அனைவரையும் உள்வாங்குதல் மற்றும் கற்றல் சூழலை வளர்க்க வேண்டும் என்பதில் JAT Holdings நம்பிக்கை கொண்டுள்ளது. 

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில், தகுதிவாய்ந்த ஆளணி மற்றும் நிபுணத்துவம் இல்லாதது பெரும்பாலான வேளைகளில் வணிக போட்டித்திறன் மற்றும் மேம்பாட்டுக்கான சாத்தியக்கூறுகளின் முட்டுக்கட்டைகளுக்கு வழிவகுக்கிறது. நிறுவனத்தின் விழுமியங்களால் வழிநடாத்திச் செல்லப்படுகின்ற JAT Holdings நாட்டின் தனியார் துறையில் முதலீடு செய்வதன் மூலம் சமூகத்துக்குப் பிரதியுபகாரம் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுச் செயற்றிட்டமானது ஆண்டுதோறும் யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறையிலிருந்து குறைந்தபட்சம் 100 மாணவர்களுக்கு அவர்களின் தொழில் திறன்களை மேலும் மேம்படுத்த பயிற்சி அளிக்கும். இந்த முயற்சியின் மூலம், இளைஞர்களை ஊக்குவிக்கவும், சமூகங்களை வளர்க்கவும், வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் JAT எதிர்பார்க்கிறது. 

JAT Holdings வழங்கும் முடிவற்ற ஆதரவுடன், வெவ்வேறு ஆளுமைகளைக் கொண்ட இளைஞர்கள் கல்வித் தகுதிகளுக்கு அப்பால், நேரடி பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது. செயல்முறை அறிவுத்திறன் குன்றிய மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள இளைஞர்கள் என இரு தரப்பினருக்கும் அடிப்படை திறன்கள், புதிதாக கற்றுக்கொள்ளும் திறன்கள் மற்றும் திட்டமிடல், வடிவமைப்பு, ஒரே நேரத்தில் பல பணிகளை முன்னெடுத்தல் மற்றும் தொடர்பு கொள்ளும் திறன் ஆகியவற்றைக் கற்றுக் கொள்ளும் வரப்பிரசாதம் கிடைக்கின்றது. 5 முதல் 12 மாதங்கள் வரையான கால உத்தரவாதத்துடன், GIZ தொழிற்பயிற்சி திட்டமானது மாணவர்களுக்கு அவர்களின் ஒட்டுமொத்த திறமையை அடைய மற்றும் அவற்றை வளர்க்க இலவசமாக வழிகாட்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .