Gavitha / 2016 டிசெம்பர் 14 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் சீமெந்து உற்பத்தியாளரான ஹொல்சிம் (லங்கா) லிமிட்டெட், தாய்லாந்தை அடிப்படையாகக்கொண்ட Siam City கொங்கிறீற் கம்பனி லிமிட்டெட் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, எதிர்வரும் காலங்களில் ஹொல்சிம் தயாரிப்புகள் INSEE சீமெந்து எனும் வர்த்தக நாமத்தில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 30 வருட காலமாக பாரம்பரியமான சங்ஸ்தா சீமெந்து விநியோகத்தை நிறுவனம் தொடர்ந்து முன்னெடுத்து வரும். அத்துடன், தேசத்தின் புகழ்பெற்ற நாமமான “மஹாவலி மரைன்” சீமெந்தும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும். புதிதாக செயற்பாடுகளை முன்னெடுக்கும் நிறுவனத்தினால், INSEE Pro, INSEE Pro Plus மற்றும் INSEE Extra போன்ற தயாரிப்புகளும் மாபெரும் செயற்றிட்டங்களுக்கு பொருந்தும் வகையில் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
INSEE என்பது தென்கிழக்காசிய பிராந்தியத்தில் முன்னணி சீமெந்து உற்பத்தியாளராகத் திகழ்வதுடன், 1969ஆம் ஆண்டு தாய்லாந்தில் நிறுவப்பட்டிருந்தது. நிறுவனத்தின் மூலமாக INSEE வர்த்தக நாம சீமெந்து, நிர்மாண மூலப்பொருட்கள் மற்றும் தீர்வுகள் உற்பத்தி செய்யப்படுவதுடன், அவை கம்போடியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் சந்தைப்படுத்தப்படுகின்றன. தாய்லாந்தில் சந்தை முன்னோடியாக இந்த நாமம் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு INSEEஇல் பெருமளவு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இலங்கையில் செயற்பாடுகள் கையகப்படுத்தப்பட்டுள்ளமை, இதே கவனத்தை இலங்கையிலும் செலுத்தவுள்ளது. நிறுவனத்தினால், INSEE Extra சீமெந்து மற்றும் சங்ஸ்தா சீமெந்து போன்றன சந்தைப்படுத்தப்படுவதுடன், இவை அனைத்தும் சூழலுக்கு பாதுகாப்பானவை என்பதுடன், ஒரு சீமெந்து பொதிக்கு 7 கிலோகிராம் காபனீரொட்சைட் எனும் ஆகக்குறைந்த வாயு வெளியீட்டை கொண்டுள்ளது.
இலங்கையின் தேசிய வளர்ச்சியில் பங்களிப்பு வழங்க INSEE சீமெந்து திட்டமிட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் பங்களிப்பு வழங்க INSEE தன்னை அர்ப்பணித்திருக்கும். குறிப்பாக வீதிப்பாதுகாப்பு மற்றும் சூழல் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்படும். மக்கள் மீதான முதலீடுகள் மற்றும் சமூகங்களின் தரத்தை உயர்த்தல் போன்றன நீண்ட கால தாக்கத்தைக் கொண்டிருக்கும் என்பதுடன், தேசத்தை முன்நோக்கி கொண்டு சென்று சுபீட்சத்தைப் பெற்றுக்கொடுக்க உதவியாக அமைந்திருக்கும். புதிய நிறுவனம் எனும் வகையில், INSEE சீமெந்து தனது விநியோகத் தொடரில் நிலைபேறாண்மை குறித்து தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அது பிரகாசமான எதிர்காலத்துக்கான அடித்தளமாக அமைந்திருக்கும்.
50 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
2 hours ago