2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

Office 2016ஐ இலங்கைக்கு முதன் முறையாக வெளியிடும் மைக்ரோசொவ்ட் நிறுவனம்

A.P.Mathan   / 2015 ஒக்டோபர் 04 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வருடம் ஜூலை மாதம் Windows 10ஐ உத்தியோகபூர்வமாக வெளியிட்ட மைக்ரோசொவ்ட் நிறுவனம் 22 செப்டெம்பர் 2015ஆன இன்று Office 2016ஐ உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த Windows 10 மற்றும் Office 2016 ஆகியன ஒன்றிணைந்து ஒரு முழுமையான தீர்வை வழங்கக் கூடியதுடன் இந்த Office 2016 மென்பொருளானது எந்தவொரு திரையிலும் எப்போதும் மிக அழகாகவும், மிக இலகுவாக பகிரக்கூடியதுடன் சிறந்த விதத்திலும் இயங்கும். Windows Helloஇனால் Windows மற்றும் Office 365 இல் உள்நுழைவதற்கான இலகுவான முதற்படியாக இது செயற்படும்.

Office 2016 ஆனது Office 365இல் உள்ளடங்கிய புதிய மென்பொருள் என்பதுடன், அதில் காணப்படும் பல்வேறு அம்சங்களும் அதனால் கிடைக்கக் கூடிய செயற்திறன் மற்றும் மேம்பாடுகள் ஏறாலம் மற்றும் Office 365இன் சேவைகள் மற்றும் அதிலுள்ள பயன்பாடுகள் மூலம் Office எவ்வாறு விரிவாக்கப்பட்டு சிறந்தவொரு மென்பொருளாகவும் மற்றும் சேவையாகவுள்ள ஒரு கூட்டு செயற்திறன் கொண்ட ஒரு உற்பத்தியாக நிறுவனம் இந்த Office 2016ஐ வெளியிட்டுள்ளது.

அறிவாற்றல் கொண்டு வேகமாகவும் மற்றும் திறம்படவும் பணியாற்ற Office 2016 உதவும்
•    Outlook 2016 சிறந்த Inbox வசதி, மின்னல் வேகத்துடன் தேடக்கூடிய வசதி, மற்றும் தன்னிச்சையாக நீக்கக் கூடிய குறைந்த முன்னுரிமையுள்ள மின்னஞ்சல் வசதிகளைக் கொண்டது.
•    Tell Me நீங்கள் விரைவாக சரியான Office அம்சத்தை (Feature) கண்டுபிடிக்க, அல்லது கட்டளை (Command) மற்றும் சிறப்பான தேடலின் ஊடாக இணையத்தளத்திலுள்ள நுண்ணறிவு திறன்கொண்டது.
•    Excel 2016 இதன் ஊடாக உங்கள் தரவுகளை மிகவும் சிறந்த விதத்தில் உள்ளடக்க உதவும் Power BI மற்றும் புதிய நவீன வரிசையில் ஒருங்கிணைந்து வெளியிட உதவும்.

Office 365இல் உள்ளடக்கப்பட்டுள்ள Office 2016 மென்பொருளானது சிறந்த நிறுவன பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கான புதிய திறன்களை வழங்குகின்றது.
•    Data Loss Prevention இது Word, PowerPoint, Excel, Outlook, தரவுகளை கணிசமான அளவு ஆபத்தான தரவுகளை வெளியில் கசியவிடாது தடுப்பதற்கு IT administrators முகாமைத்துவ கருவிகள் மூலம் கட்டுப்படுத்த முடியும்.
•    Multi-factor Authentication நீங்கள் வேலை தளத்தில் இல்லாத போதிலும் அந்த சேவையை இன்னொரு இடத்தில் இருந்து பெறக்கூடிய வசதி கொண்டது.
•    Enterprise Data Protection இது Windows 10 கையடக்க தொலைபேசியிலும் Office Appsஐ இலகுவாக பெற்றுக் கொள்ள முடிவதுடன் இதனூடாகவும் பகிர்வுகளை செய்ய முடியும்.

Windows 10 ஒரு சிறந்த Nசைவயை வழங்குவதோடு, ஒரு சாதனமாக வாழ்நாள் முழுவதும் சிறந்த பாதுகாப்பான, புதுமையான மற்றும் மேம்படுத்தப்பட்ட அனுபவங்களை வழங்குவதோடு Mobile First, Cloud First என்பதற்கு அமைய கணினி சகாப்தத்தின் இதுவொரு ஆரம்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அனுபவங்கள் பலவற்றை உள்ளடக்கிய Windows 10 தனிப்பட்ட கணினி தொழில்நுட்ப மையத்தினதும் ஒரு ஆரம்பமாகும்.

இந்த Windows 10 மற்றும் Office 2016 ஒவ்வொரு தனி நபருக்கும் மறுவலியுறுத்தலைக் கொடுப்பது மட்டுமன்றி ஒவ்வொரு நிறுவனமும் உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் தமது முக்கிய வெற்றிப்படிகளில் சென்று சாதிக்க முடியும்.

மைக்ரோசொவ்ட் நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவு வதிவிட முகாமையாளர் Brian Kealey கூறுகையில், 'நிறுவனம் சில சிறந்த முன்னேற்றகரமான செயற்பாடுகளான Cloud First – Mobile First World ஆகிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் போதே நான் இங்கு வந்துள்ளேன். மற்றும் புதிய பகிர்வு மற்றும் புதுமையான செயல்திறன் கொண்ட தொழில்நுட்பத்தின் இலங்கைக்கு வழங்கவுள்ளோம். அத்துடன் கூட்டு பங்களிப்பு செய்வதன் மூலம் நாம் ஏற்கனவே Digital பங்கீட்டை கல்வித்துறைக்கும் மற்றும் பாரிய சமூகத்திற்கும், புலம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்கள் மற்றும் வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கும் வழங்கியுள்ளோம். என்னுடைய தலைமைத்துவ குழுவின் மூலம் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் செயற்பாடுகள் மற்றும் ஒத்துழைப்புக்களினால் தொழில்நுட்பத்தை இலங்கையின் அனைத்து பிரிவிற்கும் விஸ்தரிப்பதன் ஊடாக அரசிற்கு ஒத்துழைக்கவுள்ளோம்.' ஏனத் தெரிவித்தார்.

உற்பத்தி மற்றும் வணிக செயலாக்க உருவில் உலகம் முழுவதிலும் ஒவ்வொருவர் வாழ்விலும் வித்தியாசத்தை உருவாக்கி அதனூடாக சிறந்த இலக்குகளை அடைவதற்கு டைக்ரோசொவ்ட்டின் 3 கூறுகளும் வழிவகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X