2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

UK இல் ‘தசாப்த சிறப்பு’ விருதை வென்ற கொமர்ஷல் வங்கி

Editorial   / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

Global Banking & Finance Review இன் வருடாந்த விருது வழங்கும் நிகழ்ச்சியின் 10 ஆவது நிகழ்ச்சியில், இலங்கையில் சில்லறை வங்கியியலுக்கான ´தசாப்த சிறப்பு விருதை’ கொமர்ஷல் வங்கி பெற்றுக்கொண்டது.  

Global Banking & Finance Awards ஆனது உலகளாவிய நிதித்துறை சமூகத்துக்குள் நிகழும் புத்தாக்கம், சாதனை, மூலோபாயம், முற்போக்கான உத்வேகம் தரும் மாற்றங்களை அங்கிகரிக்கின்றது. மேலும், நிதித் துறையில் நிபுணத்துவம், சிறப்பான பகுதிகளில் முன்னணியிலிருக்கும் அனைத்து அளவிலான நிறுவனங்களுக்கும் அங்கிகாரம் வழங்கப்படுவதை உறுதிசெய்வதற்காக, இவ்விருது நிகழ்ச்சி நடாத்தப்படுகின்றது.  

இந்த விருது குறித்து, கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ். ரங்கநாதன் கருத்து தெரிவிக்கையில், “வங்கியியலில் நிலைத் தன்மை என்பது மிகவும் பெறுமதிமிக்க தகுதியாக மதிக்கப்படுகின்றது. மேலும், ஒரு தசாப்தகால சிறப்புக்கு அங்கிகாரம் பெறுவது என்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும். கொமர்ஷல் வங்கியானது இலங்கையில் 100 ஆண்டுகால வங்கியியலைக் கொண்டாடும் நேரத்தில், இந்த விருதும் வழங்கப்பட்டிருப்பதானது மேலும் சிறப்பாக அமைந்திருக்கின்றது.´ என்று தெரிவித்தார்.  

தொடர்ச்சியாக, ஒன்பது ஆண்டுகளாக உலகின் சிறந்த 1,000 வங்கிகளில் இடம்பெற்ற இலங்கையைச் சேர்ந்த ஒரே வங்கி கொமர்ஷல் வங்கியாகும். கொமர்ஷல் வங்கியானது இலங்கையின் மிகப் பெரியதனியார் வங்கியாக மட்டுமன்றி, சர்வதேசத்திலும் இயங்குகின்ற இலங்கையின் ஒரே தனியார் வங்கியாகவும் திகழ்கின்றது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .