Gavitha / 2016 ஜூலை 31 , மு.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் யமஹா வர்த்தகப் பெயரின் ஏக முகவரான அசோஷியேட்டட் மோட்டர்வேய்ஸ் (பிரைவட்) லிமிட்டட் (AMW),Yamaha Ray ZR என்ற புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிமுக வைபவம் ஹில்டன் கொழும்பு ரெஸிடன்சீஸில் அண்மையில் இடம்பெற்றது. AMW குழுவின் முகாமைத்துவப் பணிப்பாளர் சமந்த ராஜபக்ஷ, பயணிகள் வாகனப் பணிப்பாளர் யொஹான் டீ ஸொய்ஸா, யமஹா பொது முகாமையாளர் ஷெஹான் டீ ஸொய்ஸா, யமஹாவின் விற்பனைகள் மற்றும் செயற்பாடுகள் முகாமையாளர் ஸஹ்ரான் ஸியாவுதீன், யமஹா ஜப்பானின் பிரதிநிதி ஒஹ்னோ இஸூமி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தனித்துவமான, எழிலான, கட்டுறுதி வாய்ந்த Yamaha Ray ZR ஸ்கூட்டர் அதில் சவாரி செய்பவருக்குக் கம்பீரமான தோற்றத்தை வழங்கும். அதிநவீன Bluecore தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு லீற்றரில் 66 கிலோ மீற்றர் என்ற சிறந்த எரிபொருள் பாவனையைக் கொண்ட இந்த அசாதாரண ஸ்கூட்டர், 5.2 லீற்றர் எரிபொருள் தாங்கியைக் கொண்டிருப்பதால் வாகன நெரிசல் வேளைகளிலும் அதிக தூரம் பயணிப்பதற்கு உதவும்.
Yamaha Ray ZR ஸ்கூட்டர் ஓட்டோ கியர் வசதியுடன் கிடைக்கிறது. ஆகவே, ஸ்கூட்டர் ஓட்டுவதைப் புதிதாகத் தொடங்கியவர்களுக்கு மிகவும் வசதியானதும் பாதுகாப்பானதும் ஆகும். தொழில்நுட்பச் சிறப்புகளைப் பொறுத்தவரையில், இந்த ஸ்கூட்டரில் எயார் கூல்ட் 4-ஸ்ட்ரோக், SOHC 2 வால்வு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 113 உஉ டிஸ்பிளேஸ்மன்ற் டியூப்லஸ் டயர்கள், 21 லீற்றர் களஞ்சிய வசதி என்பன அதன் ஏனைய சிறப்பம்சங்களாகும்.
யமஹா பொது முகாமையாளர் ஷெஹான் டீ
ஸொய்ஸா தகவல் தருகையில் 'உலகின் தலைசிறந்த தொழில்நுட்பத்தை இலங்கைச் சந்தைக்குக் கொண்டுவருவதில் யமஹா ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது. Yamaha Ray ZR ஸ்கூட்டரின் அறிமுகம் இலங்கை ஸ்கூட்டர் சந்தையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தின் ஆரம்பமாகும்' என்று கூறினார்.
11 minute ago
21 minute ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
21 minute ago
5 hours ago
5 hours ago