2025 ஜூலை 03, வியாழக்கிழமை

A தரப்படுத்தலை பெற்றுள்ள ஜனசக்தி காப்புறுதி நிறுவனம்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 16 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


நீண்ட மற்றும் குறுகிய கால இழப்பீட்டு உரிமைக்கோரல்களை வழங்கும் ஜனசக்தி நிறுவனமானது A- மற்றும் P2 தரத்திலிருந்து RAM ரேடிங் லங்காவினால் A மற்றும் P2 தரப்படுத்தலுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந் நிறுவனம் இதற்கு முன்னர் வர்த்தக சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்வில் தங்க விருதை வென்றுள்ளது. மேலும் தொழில்நுட்பம், மக்கள் மேலாண்மை மற்றும் தரமான அறிக்கை  போன்றவற்றிற்கு உள்நாடு மற்றும் சர்வதேச ரீதியில் பல்வேறு விருதுகளை வென்றுள்ள ஜனசக்தி நிறுவனத்தின் சிறப்பான செயற்பாடுகளை மேம்படுத்துவதாக இவ் விருது அமைந்துள்ளது.

ஜனசக்தி நிறுவனம், காப்புறுதி துறையில் ISO சான்றிதழை பெற்று முன்னோடியாக திகழ்கிறது. இந் நிறுவனம் அண்மையில் மீள் சான்றிதழை பெற்றுள்ளதுடன், தொடர்ச்சியாக புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் முறைமைகள் மற்றும் செயல்பாட்டு வரையறைகள் மீது ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

இந் நிறுவனம், கொள்கை/ பங்காளர்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான திறனை கொண்டுள்ளது என்பதை இத் தரப்படுத்தல் பிரதிபலிக்கிறது. இத்தரப்படுத்தல் நடவடிக்கைகளின் போது ஓர் காப்புறுதி நிறுவனம், மோசமான சூழ்நிலை மற்றும் பொருளாதார நிலைமைகளின் போது அவசியமான மாற்றங்கள் மேற்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.

காப்புறுதி நிறுவனங்கள், கொள்கை/ ஒப்பந்ததாரரின் நிதி தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான வலுவான திறனை கொண்டிருத்தல் வேண்டும். காப்புறுதி நிறுவனமானது பொருளாதார நிலைமைகள் மற்றும் சூழ்நிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை கையாளக்கூடிய நெகிழ்வுத்தன்மையை கொண்டிருத்தல் வேண்டும். 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜனசக்தி நிறுவனம், இன்று கொழும்பு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட 7 காப்புறுதி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்குகிறது. 1994 ஆம் ஆண்டு பிரத்தியேக ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட ஜனசக்தி இன்று மோட்டார் காப்புறுதி துறை மீது ஆதிக்கம் செலுத்தும் இலங்கையின் மூன்றாவது மிகப்பெரிய பொதுக்காப்புறுதி வழங்குனராக உள்ளது. இந் நிறுவனம் 105 கிளை வலையமைப்புகளை கொண்டுள்ளது. ஜனசக்தி நிறுவனமானது 2013 ஆம் ஆண்டு 8.42% வளர்ச்சியை பெற்று சாதகமான பிரதிபலன்களை வெளிப்படுத்தியுள்ளது.

கம்பனியின் மூலதனவாக்கம் என்பது 2012 டிசம்பர் மாத நிறைவில், துறையில் நிலவிய சிறந்த இருப்பாக அமைந்திருந்தது. காப்புறுதிக்கான பங்குதாரர்களின் நிதி மற்றும் மொத்த சொத்துக்களுக்கான பங்குதாரர்களின் நிதி என்பவற்றின் விகிதம் முறையே 32.92% மற்றும் 21.31% ஆக அமைந்திருந்தன.

ஜனசக்தி பொதுக்காப்புறுதி பிரிவானது தனது பங்குகளை குறைத்து அரசாங்க பாதுகாப்பு மீதான கவனத்தை அதிகரித்து, கடந்தாண்டு பதிவான 1.49 வீதத்தை காட்டிலும், 2012 டிசம்பர் மாத இறுதியில் 2.17 வீதத்தை பெற்று அதிகரிப்பை காட்டியுள்ளது.

ஜனசக்தி நிறுவனத்தின் முதலீடுகள் அதிகரித்ததன் விளைவாக ஆயுள் காப்பீடு கடன் தீர்க்கும் விகிதம் அதே தினத்தன்று (2011 டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் 2.50 வீதங்கள்) 4.44 வீதங்கள் பதிவாகி உயர்வடைந்திருந்தது.

இந் நிறுவனத்தின் 2012 டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டின்; 94.84மூ மாற்றமடையாத ஒருங்கிணைந்த விகிதமானது இறுக்கமான செலவு கட்டுப்பாடு மற்றும் சிறந்த உரிமைக்கோரல் மேலாண்மை செயல்பாட்டினை பிரதிபலிக்கிறது (2011 டிசம்பர் முடிவடைந்த நிதியாண்டில் 93.15%). ஜனசக்தியின் பங்குதாரரின் நிதியில் தொழில்நுட்ப ஒதுக்கீடானது 136.91%  வளர்ச்சியை கொண்டுள்ளது.

'ஜனசக்தி நிறுவனத்தின் ஆயுள்-காப்பீட்டு ஏற்கும் திறன் சிறப்பாகவுள்ளது. மரணம், ஆயுள் காப்புறுதி இழப்பீட்டு விகிதம் போன்றவற்றின் பிரிவுகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் கடுமையான செலவு கட்டுப்பாடு செயற்பாடுகள் நிறுவனத்தின் நிகர காப்பீடு ஏற்கும் திறனை அதிகரிக்கச் செய்துள்ளது' என RAM லங்காவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனசக்தி நிறுவனமானது அனுபவம் வாய்ந்த அணியினரின் ஆதரவுடன் முகாமைத்துவ பணிப்பாளர் பிரகாஷ் ஷாஃப்ட்டர் அவர்களினால் வழிநடாத்தப்படுகிறது. இந் நிறுவனத்தின் நிர்வாகக்குழு எதிர்காலத்தில் தமது நிறுவன வளர்ச்சிக்கு உறுதுணையான ஆயுள் காப்புறுதி பிரிவை விஸ்தரிக்கவுள்ளதுடன், செலவு கட்டுப்பாடு மற்றும் கடுமையான கடன் ஏற்கும் திறன் குறித்தும் கவனம் செலுத்தவுள்ளது. இருப்பினும் பொதுக்காப்புறுதி பிரிவு குறித்து விசேட கவனம் செலுத்தப்படும். ஜனசக்தி நிர்வாகக் குழுவின் தலைவராக டபிள்யு.டி.எல்லாவெல உள்ளதுடன், 8 பணிப்பாளர்கள், 4 நிறைவேற்றல்லாத சுயாதீன பணிப்பாளர்கள் உள்ளடங்குகின்றனர்.

இந் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரகாஷ் ஷாஃப்ட்டர், 'RAM இன் தரப்படுத்தலை பெற்றுக் கொண்டுள்ளமை தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், நிதிசார் வலிமையை வலியுறுத்துவதாகவும் அமைந்துள்ளது. சவால் நிறைந்த சந்தைச்சூழலில் இந் நிறுவனத்தின் நிலையாண்மை, வருமானமீட்டும் திறன் மற்றும் வணிக வீரியம் முன்னிலையில் திகழ்கிறது. நாம் எமது 20 ஆண்டு பூர்த்தியை கொண்டாடவுள்ளதுடன், சேவை மற்றும் உற்பத்தி வழங்கலின் தரத்தை தொடர்ந்தும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்' என தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .