2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

சமூக வலைத்தள ஆர்வலர்களுக்காக Canvas Social A94

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் கையடக்க தொலைபேசி சந்தையில் தனது தலைமைத்துவ நிலையை மேலும் உறுதி செய்யும் வகையில் உலகளாவிய ரீதியில் உலகில் 10 ஆம் நிலையில் காணப்படும் கையடக்க தொலைபேசி உற்பத்தியாளருமான மைக்ரோமெக்ஸ், Canvas Social A94 எனும் புதிய கையடக்க தொலைபேசியை அறிமுகம் செய்துள்ளது. சமூக வலைத்தளங்களில் தமது நேரத்தை செலவிட ஆர்வமாக உள்ள பாவனையாளர்களுக்கு பொருத்தமான வகையில் இந்த ஸ்மார்ட்ஃபோன் அமைந்துள்ளது.

இந்த A94 கையடக்க தொலைபேசியானது 4.5 அங்குல தொடு திரையை கொண்டுள்ளதுடன், முன்புறமும் பின்புறமும் 5MP திறன் கொண்ட கமராவை கொண்டுள்ளது. உயர் திறன் வாய்ந்த முன்புற கமராவின் மூலம் பாவனையாளர்களுக்கு தமது தோற்றத்தை தெளிவாக படம் பிடித்துக் கொள்ள முடியும். அத்துடன் வீடியோ மூலமான உரையாடல்களை உயர்தரத்தில் முன்னெடுக்க உதவும் வகையில் இந்த கமரா அமைந்துள்ளது. 1.2 GHz quad core processor மற்றும் 1800 mAh பற்றரி ஆகியன ஒவ்வொரு சமூக வலைத்தள பாவனையாளர்களின் தேவைகளையும் நிவர்த்தி செய்வதை உறுதி செய்கின்றன.

இந்த புதிய கையடக்க தொலைபேசி அறிமுகம் தொடர்பில் மைக்ரோமெக்ஸ் நிறுவனத்தின் சர்வதேச வியாபார நடவடிக்கைகளுக்கான உதவி தலைவர் அமித் மத்தூர் கருத்து தெரிவிக்கையில், 'எமது உறுதியான சந்தைகளில் இலங்கையும் ஒன்று. நாம் வர்த்தக நடவடிக்கைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வழங்கும் பகுதிகளில் இதுவும் ஒன்றாக அமைந்துள்ளது. எமது வாடிக்கையாளர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தில் அமைந்த அனுபவங்களை வழங்கும் வகையிலமைந்த தயாரிப்புகளை அறிமுகம் செய்வது தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்துகிறோம். Canvas Social A94 இன் அறிமுகத்துடன் இலங்கையின் அனைத்து பாவனையாளர்களுக்கும் தொழில்நுட்பம் மற்றும் நவீன தோற்றத்துடன் கூடிய புதிய தயாரிப்பை வழங்கியுள்ளோம். தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வது தொடர்பில் எமது அர்ப்பணிப்பை இந்த புதிய தயாரிப்பு அமைந்துள்ளதுடன் பாவனையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையிலும் இது அமைந்துள்ளது' என்றார்.

32GB வரை அதிகரித்துக் கொள்ளக்கூடிய memory ஐ கொண்டுள்ள இந்த புதிய கையடக்க தொலைபேசி, பாடல்கள், வீடியோக்கள், படங்கள் மற்றும் கோப்புகள் ஆகியவற்றை தரவிறக்கம் செய்து சேமித்து வைக்கக்கூடிய வசதிகளை கொண்டுள்ளது. Instant Messaging செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய Hike, இலவசமாக படங்களை பார்வையிட Spuul, ஆவணங்களை பார்வையிடவும், மாற்றங்களை மேற்கொள்ளக்கூடிய வகையில் அமைந்த Kingsoft office, net-surfing செய்வதற்காக Opera Mini, உயர்தரம் வாய்ந்த கேம்ஸ்களை விளையாடி மகிழ்வதற்கும், வீடியோ, பாடல்கள் மற்றும் வோல் பேப்பர்கள் பார்வையிடும் வகையில் M!Live போன்ற ஆப்ஸ்களை கொண்டுள்ளன. 3G, WiFi, Bluetooth 4.0 மற்றும் GPS ஆகிய வசதிகளையும் இது கொண்டுள்ளது. இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் தமது பொழுதை செலவிடும் பாவனையாளர்களுக்கு பெரிதும் பயனுள்ள வகையில் இந்த கையடக்க தொலைபேசி அமைந்துள்ளது.

Canvas Social A94 ஒன்றின் விலை 15,990 ஆக அமைந்துள்ளது. நாட்டின் சகல முன்னணி விற்பனை நிலையங்களிலிருந்தும் வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்யலாம். மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ள www.micromaxinfo.com/sl எனும் இணையத்தளத்தை பார்வையிடவும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--