2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

Cox ஊடக வலையமைப்பில் ஹமீடியா

Menaka Mookandi   / 2011 மார்ச் 03 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் ஆண்கள் ஆடைத்துறையில் நிபுணத்துவம் பெற்ற முன்னணி நிறுவனமான ஹமீடியா  உலகெங்கும் உள்ள தங்குவிடுதிகள்,  ஹோட்டல்கள் மற்றும் மக்களைக் கவரும் விடயங்கள் தொடர்பான விவரண சித்திரங்களை ஒளிபரப்பும் “Exclusive Resorts and Day Spas”என்ற விருதுபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின் கொக்ஸ் (Cox) ஊடக வலைப்பின்னல் ஊடாக இந்நிகழ்ச்சி அண்மையில் ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்ச்சி உலகெங்கிலுமுள்ள ஏனைய தொலைக்காட்சி வலையமைப்புகளூடாகவும் மிக விரைவில் ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது.

அண்மையில் கொழும்புக்கு வந்திருந்த பிரபல நட்சத்திரமான அலெக்ஸான்டர் ஷாம்ப்லி, இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவரணமாக ஒளிபரப்புவதற்காக ஹமீடியா நிறுவனத்தை தேர்வு செய்திருந்தார்.

'எனது கருத்துப்படி, நவ நாகரிக உலகில் மிகச் சிறந்த தையல் கலை நிறுவனங்களுள் ஒன்றாக ஹமீடியா திகழ்கின்றது. அந்நிறுவன வடிவமைப்புக்களின் தரம் மற்றும் தூய்மையான தொழில்வாண்மைத்துவம் என்பன என்னை மிகவும் கவர்ந்துள்ளன.

இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியானது முன்னணி தங்குவிடுதிகள், ஹோட்டல்கள் மற்றும் கவனத்தை கவரும் விடயங்கள் தொடர்பாகவே அதிக கவனம் செலுத்துகின்றது என்றபோதிலும், இலங்கைப் பிரிவில் ஹமீடியா நிறுவனத்தை உள்ளடக்குவதும் இப்பிராந்தியத்தில் காணப்படும் சிறப்பான விடயங்களுள் ஒன்றாக அந்த நிறுவனத்தை ஊக்குவிப்பதும் பொருத்தமானதாக அமையும் என்று நான் நினைத்தேன்' என்றார்.

'முன்னாள் உலக மொடல் கலைஞர் என்ற வகையில், நவநாகரிக மற்றும் அழகுசார் வர்த்தகத்தில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக முன்னணியில் இருந்து வரும் நான், புதுமாதிரியான வடிமைப்புகளுக்காக ஹமீடியா நிறுவனத்தை உயர்வாக மதிக்கின்றேன். அதனது உற்பத்திகள் உலகத் தரம் வாய்ந்தவை. எனவே மிகவும் போட்டித்தன்மைமிக்க சர்வதேசச் சந்தையில் ஹமீடியா சிறப்பாக செயற்படாது என்பதற்கு எந்தவொரு காரணமும் கிடையாது' என்றும் ஷாம்ப்லி மேலும் குறிப்பிட்டார்.

இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியானது கடந்த 6 வருடங்களாக தயாரிக்கப்பட்டு வருவதுடன் எண்ணற்ற அங்கங்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளன. இதன்படி மாலைதீவுகள், துபாய், ஹொங்கொங், வியட்நாம், அவுஸ்திரேலியா, தாய்லாந்து போன்றவை மிகவும் பிரபலமான அடைவிடங்களாக இருக்கின்றன. இணையத்தள சேவையினூடாக 35 நாடுகளைச் சேர்ந்த நேயர்களை இந்நிகழ்ச்சி கவர்ந்துள்ளதுடன் ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இந்நிகழ்ச்சியை பார்க்கின்றனர்.

Exclusive Resorts and Day Spas தொலைக்காட்சி நிகழ்ச்சியானது உலகிலுள்ள முன்னணி தங்குவிடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் தொடர்பான விவரண தொடர்களை ஒளிபரப்புச் செய்துள்ளது. ரெபிள்ஸ் ஹோட்டல்கள், கெம்பின்ஸ்கி, ஜோன் கீல்ஸ் கு×ப், டபள்யு ஹோட்டல், தாஹ் ஹோட்டல்கள் போன்ற பெயர் குறிப்பிடத்தக்க சொகுசு வகைசார் வர்த்தகக் குறியீடுகளைக் கொண்ட ஹோட்டல்கள் இவற்றுள் உள்ளடங்கியிருந்தன.

அலக்ஸான்டர் ஷாம்ப்லி, பிரபலமான Mode Bride, Nosatras Magzine as Fashion, Travel Journalist, Wentworth Courier (பயணங்கள் தொடர்பான கட்டுரை), The Bulletinஇன்  போன்ற பல்வேறு வாழ்க்கை முறை மற்றும் பயணங்கள் தொடர்பான முன்னணி சர்வதேச வெளியீடுகளுக்காக கட்டுரைகளை எழுதியுள்ளார்.

ஷிம்ப்லியின் கம்பனியான “LifeStyles Incorporated”ஆனது, உலகிலுள்ள முன்னணி நவநாரிக மையங்களில் இயங்கி வரும் அதேவேளை, உலகத் தரம் வாய்ந்த சேவையை வழங்குதல் மற்றும் உலகெங்கும் காலமாற்றத்தோடு இணைந்ததாக நவநாகரிக போக்குகளில் மாற்றங்களை கொண்டுவருதல் போன்ற விடயங்களில் சர்வதேச அளவில் நன்மதிப்பையும் பெற்றுக்கொண்டுள்ளது.

வர்த்தக துறையிலுள்ள பெண்களுக்கு பொருத்தமான வகையில் வடிவமைக்கப்பட்ட நவநாகரிகம் தொடர்பான நிகழ்ச்சிகளை இவர் உலகெங்கும் வெற்றிகரமாக நடத்தியுள்ளார். நவ நாகரிகம், பகல்நேர மற்றும் மாலைநேர ஒப்பனை நுட்பங்கள், நவீன கேசப் பராமரிப்பு போக்குகள், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து அத்துடன் வெற்றிக்காக ஆடை  அணிதல் போன்ற விடயதானங்களை உள்ளடக்கியதாக இந்த நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன.

அண்மைய வருடங்களில் அவர் எழுதிய புத்தகமொன்று நியூயோர்க்இ வென்டேஜ் பிரஸ் இனால் பிரசுரத்திற்காக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கு 'அழகு  ஒரு விஷேட செய்தி' (Beauty – a Special Message)எனத் தலைப்பிடப்பட்டது. இது, அழகு மற்றும் நவநாகரிகம் தொடர்பான நவீன போக்குகளில் அதிகளவு கவனம் செலுத்துவதாக இருந்தது.

அவுஸ்திரேலியா மற்றும் னெளிநாடுகளின் பிரதமர்கள், அரச தலைவர்களுக்கு விரிவுரைகளை நடத்தியுள்ளார். உலகின் முன்னணி தங்குவிடுதிகள் மற்றும் ஹோட்டல்களிற்காக சர்வதேச அளவிலான இணையத் தளங்களில் தோன்றுபவர் என்ற வகையில்,  உலகளவில் நவநாகரிகம் தொடர்பான தொலைக்காட்சிகளிடையே மிகவும் மதிப்புமிக்க நபர்களுள் ஒருவராக ஷாம்ப்லி திகழ்கின்றார்.

இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் இணையத்தளமானது  ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா மற்றும் இந்து சமுத்திர பிராந்திய நாடுகளைச் சேர்ந்த நேயர்களுடன், ஒரு வாரத்திற்குள் 1 மில்லியன் பேரினால் பார்வையிடப்பட்டுள்ளது. அத்துடன் இது, சர்வதேச அளவில் என்றுமில்லாதவாறு அதிகளவில் DVD பிரதிகளின் விற்பனைக்கும் காரணமாகியது.

உலகெங்கிலும் உள்ள பல்வேறுபட்ட இடங்களில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட எண்ணற்ற அங்கங்களை பார்வையிட வேண்டுமாயின் www.exclusiveresortsanddaspas.com என்ற இணையத்தளத்திற்கு விஜயம் செய்து, அங்குள்ள DVD  Page இற்குள் பிரவேசிக்குமாறு நேயர்கள் கேட்கப்படுகின்றனர்.

'எதிர்காலத்தில் ஹமீடியா நிறுவனத்தினை உலகளாவிய ரீதியில் ஊக்குவிப்பதற்கும், இன்னும் பல அடைவிடங்கள் மற்றும் செயற்றிட்டங்கள் தொடர்பில் அவர்களுடன்  இணைந்து பணியாற்றவும் நான் எதிர்பார்க்கின்றேன்' என்று ஷாம்ப்லி கூறி முடித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .