2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

Illinois State பல்கலைக்கழகத்துடன் - SLIIT கல்வி நிலையம் கைகோர்ப்பு

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 17 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


அண்மையில் SLIIT மற்றும் அமெரிக்காவின் Illinois State University இணைந்து கல்விசார் பகிர்வு மற்றும் கற்பித்தலுக்கான கூட்டாண்மை, ஆய்வுகள் மற்றும் அபிவிருத்திக்கான பயிற்சிகளை வழங்கும் முகமாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.

இவ்விரு கல்வி நிலையங்களும் புலமைப்பரிசில்கள் பகிர்தல் மற்றும் மாணவர்கள், பணியாளர்கள் பயனடையக் கூடிய வகையில் பிரிவுகளை அமைத்துக் கொடுத்தல் என்ற அடிப்படையில் செயற்படவுள்ளன. அமெரிக்காவின் Illinois State பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில், SLIIT நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் லலித் கமகே மற்றும் Illinois State பல்கலைக்கழகத்தின் கல்விசார் பிரிவின் பிரதி தலைவர் ஷெரி நொரேன் எவர்ட்ஸ் ஆகியோர் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

Illinois State பல்கலைக்கழகமானது, Illinois பிரதேசத்தின் மிகப்பழைமையான பொது பல்கலைக்கழகமாக இருப்பதுடன், அமெரிக்காவில் பெருமளவு ஆசிரியர்களை உருவாக்கும் சிறந்த 10 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக உள்ளது என American Association of Colleges of Teacher Education அமைப்பு அறிவித்துள்ளது. இப் பல்கலைக்கழகமானது ஆராய்ச்சிகள் குறித்து அதிக முக்கியத்துவம் வழங்குவதுடன், அதன் தகவல் தொழில்நுட்ப கல்லூரியின் மூலம் கணினி மற்றும் தகவல் தொடர்பாடல் நிபுணர்களுக்கான முதற்தர இளமானிப்பட்டம் மற்றும் பட்டதாரி கற்கைகளை வழங்குகிறது. இத்திட்டங்கள் Computing Accreditation Commission of ABET இன் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

'அமெரிக்காவின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக உள்ள இப்பல்கலைக்கழகத்துடன் மேற்கொண்ட பங்காண்மை குறித்து அறிவிப்பதில் பெருமையடைகிறோம்' என SLIIT நிலையத்தின் தலைவர் பேராசிரியர்.எஸ்.கருணாரத்ன தெரிவித்தார்.  

'இப்பங்காண்மையின் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்விசார் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளமுடியும்' என பேராசிரியர் லலித் கமகே தெரிவித்தார்.

இந்நிகழ்வில் Illinois State பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜிம் ஜவஹர், பேராசிரியர் ஜெப்ரி ஏ. வூட் - Dean College of Applied Science and Technology, பேராசிரியர் ரிச்சார்ட் பொசர் – தொழில்நுட்ப பிரிவின் பேராசிரியர்/ தலைவர், பேராசிரியர் Joaquin Vila-Ruiz - தகவல் தொழில்நுட்ப கல்லூரி தலைவர், Mary Elaine Califf - பணிப்பாளர், பேராசிரியர் Klaus Schmidt - Department of School of Information Technology ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X