2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

Karbonn தொலைபேசிகள்

A.P.Mathan   / 2014 ஜூலை 02 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


மின் மற்றும் மின் பாவனைப் பொருட்களை உற்பத்தி செய்து விநியோகிக்கும் முன்னணி நிறுவனமான ஒரேன்ஜ் இலெக்ரிக், இந்தியாவில் முதன்மையான செல்லிட தொலைபேசி வியாபாரக் குறியான Karbonnனுடன் தற்போது கைகோர்த்துள்ளதோடு, அதனை இலங்கையில் சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையில் Karbonn தொலைபேசிகள் ஒரேன்ஜ் வியாபார குறியின் கீழ் இலங்கையில் விற்பனை செய்யப்படும். Orel நிறுவனத்தின் குறிகளை சந்தைப்படுத்தும் நிறுவனமான Telco arm of Orel Corporation நிறுவனம் இலங்கையில் செல்லிடத் தொலைபேசி சந்தையில் 20 சதவீதத்தை தன்வசப்படுத்த திட்டமிட்டுள்ளது.
 
Karbonn தொலைபேசி, ஒரேன்ஜ் வியாபாரக் குறியின் கீழ் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் இரண்டாவது செல்லிட தொலைபேசியாகும். இந்தியாவில் Smart Phone வகைகளின் பெரும் வெற்றிச் சரித்திரத்தை பதிக்க உருதுணையான 3ஆவது முன்னணி தரத்திலுள்ள Karbonnஐ உருவாக்கிய Jaina மற்றும் UTL நிறுவனங்களுடன் கூட்டிணைந்து நாட்டில் செல்லிட தொலைபேசி விற்பனையில் ஈடுபடவுள்ளது. சமீப கால அறிக்கைகளின் அடிப்படையில் இந்தியாவில் துரிதமாக வளர்ந்து வரும் மூன்றாவது செல்லிட தொலைபேசி வியாபாரக் குறி இதுவாகும். அந்த வெற்றியின் பலனாக Jaina மற்றும் UTL ஆகிய நிறுவனங்கள் Karbonn வியாபாரக் குறியின் விஸ்தரிப்பாக ‘Karbonn Smart’ என்ற புதிய பெயரை அண்மையில் அறிமுகம் செய்ததுடன், முற்றிலுமாக புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய சிறந்த தரத்திலான Smart Phoneகளையும் மேலும் அதி சிறந்த சிறப்பியல்புகளைக் கொண்ட Tabletகளையும் புதிய அடையாளத்தின் சந்தைக்கு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 
திரு. குஷான் கொடிதுவக்கு Orel Corporationஇன் முகாமைத்துவ பணிப்பாளர் கூறுகையில், ஒரேன்ஜ் நிறுவனம் ஆரம்பத்தில் நான்கு சிறப்பியல்புகளைக் (Feature) கொண்ட செல்லிடத் தொலைபேசிகளை Karbonn வியாபாரக் குறியின் கீழ் அறிமுகம் செய்யவுள்ளது. 'எங்களது நோக்கம் இலங்கையிலுள்ள செல்லிட சந்தைக்கு கீழ் மட்டத்திலிருந்து மெதுவாக ஊடுருவுவதாகும். Smartphoneகளுக்கு சந்தையில் பெரும் வரவேற்பு காணப்படுகிறது. அத்தோடு நாட்டிலுள்ள குறைந்த வருமானம் பெறும் குழுக்கள் செல்லிடத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவது அழைப்புக்களை ஏற்படுத்தவும் குறுந் தகவல்களை அனுப்புவதற்கும் ஆகும். மேலும் 4 வகையான செல்லிடத் தொலைபேசிகளை அறிமுகம் செய்யவுள்ளதுடன், அண்மையில் வியாபாரக் குறி இலச்சினையையும் மக்களிடையே விஸ்தீரப்படுத்துவதுமே எங்களுடைய திட்டமாக அமைகிறது. என்றார்.
 
Telco arm of Orel நிறுவனம் Smart Phoneகளை நீண்டகால திட்டத்தின் அடிப்படையிலேயே அறிமுகப்படுத்தியுள்ளதுடன், தொலைபேசி மென் பொருட்களை மேம்படுத்தி, அதன் ஊடாக மின் சாதனங்களைக் கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளது. தொலைதொடர்பு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஒரேன்ஜ் நிறுவனம் Karbonnனுடன் கூட்டிணைய எடுத்த தீர்மானமானது சிறந்ததொரு வழியாகும். இதுவரை நாம் முழு அளவில் நிர்வகித்து வரும் அனைத்து மின் மற்றும் மின்பாவனைச் சாதனங்களையும் ஓர் இடத்தில் இருந்து எளிதாக தன்னியக்கக் கருவியினால் கட்டுப்படுத்த முடியும். எனவே செல்லிட தொலைபேசி ஒரு தெளிவான தெரிவாகும். நம் வர்த்தக நடவடிக்கைகள் இயல்பாகவே வளர்ச்சியடைந்துள்ளதுடன் மற்றும் தோலைத்தொடர்பு துறையில் நம் நிறுவனத்தின் எதிர்காலத்தை பார்க்க முடிகிறது.' என கொடிதுவக்கு மேலும் தெரிவித்தார்.
 
ஒரேன்ஜ் சாதனங்களின் ஊடாக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள பாவனையாளர்களுக்கு மொத்த மின் தீர்வுகளை Orel Corporation வழங்கி வருவதுடன், இதேபோன்று இலங்கை வாழ் சமூகத்தினருக்கு தொலைத்தொடர்பு துறையில் மொத்த தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தற்போது தயாராகி வருகிறது. ஒருங்கிணைந்த சேவைகளை சேர்க்கும் வகையில் Wifi போன்ற அனைத்து தொலைத்தொடர்பு சேகைளையும் சேர்க்கவும், தேக்கி வைத்தல் போன்றவை மட்டுமன்றி வாழ்க்கையில் சில விஷயங்களை எளிதாகச் செய்யக்கூடிய விதத்தில் மின்னணு இணைப்பதே ஒட்டுமொத்த நோக்கமாகும்.
 
ஒரேன்ஜ் வலைப்பின்னலில் உள்ள விற்பனையாளர்கள் மற்றும் விற்பனைக் கூடங்களில் Karbonn செல்லிடத் தொலைபேசிகளை நாடு முழுவதிலும் பெற்றுக் கொள்ளலாம். அதுமட்டுமன்றி 800க்கும் அதிகமான கடைகளில் விற்பனைக்கு பின்னரான ஒரு வருடகால உத்தரவாதத்துடன் தொலைபேசியையும் மற்றும் ஆறு மாத உத்தரவாதத்துடன் பற்றரியையும் பெற முடியும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .