2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

Knowledge Box ஊடக நிறுவனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

Super User   / 2011 ஜூன் 16 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

Knowledge Box எனப்படும் ஊடக நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் ஜுன் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை சுற்றுலா சபை கேட்போர் கூடத்தில்  இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதி பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சீ.அகார் முஹம்மத் தலைமையுரை நிகழ்த்துவதோடு, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் அங்குரார்ப்பண உரையினை நிகழ்த்தவுள்ளனர்.

சிறந்த விழுமியங்களுடன் கூடிய சமூகத்தை உருவாக்கவதற்காகவே இந்த ஊடக நிறுவன அங்குரார்ப்பண முயற்சி மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு மேலதிகமாக சிங்கப்பூரை சேர்ந்த கணக்காய்வாளர் பெரோஸ்கானின் நூல் அறிமுகமும் இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .