2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

NDB- எடிசலாட் இணைந்து வாடிக்கையாளர்களின் கட்டணப் பட்டியல் செலுத்த புதிய திட்டம்

Super User   / 2011 ஜனவரி 14 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எடிசலாட் முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு இணைப்புகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் வசதி கருதி இலகுவாக கட்டணப்பட்டியல் செலுத்தக் கூடிய புதிய திட்டத்தை NDB வங்கியுடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய கூட்டிணைவின் மூலம் எடிசலாட் வாடிக்கையாளர்கள் தமது கட்டணப்பட்டியல்களுக்கான கட்டணத்தை  Nனுடீ வங்கியின் எந்தவொரு கிளையிலும் செலுத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டம் அறிமுகம் குறித்து Nனுடீ வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஸல் டி மெல் கருத்து தெரிவிக்கையில், 'நாடு பூராகவுமுள்ள எமது வங்கிக் கிளைகளின் மூலம் வாடிக்கையாளர்கள் தமது கட்டணப்பட்டியலை செலுத்தக் கூடிய வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளமையை முன்னிட்டு நாம் பெருமையடைகிறோம். எமது வங்கியின் மூலம் கையடக்க தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் கட்டணப்பட்டியலை செலுத்தக் கூடிய வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதில் எடிசலாட் நிறுவனத்தை தற்போது இணைத்துள்ளோம்.

இதன் மூலம் எமது வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு மற்றுமொரு பெறுமதி சேர்க்கப்பட்ட சேவையை எமக்கு வழங்க முடிந்துள்ளதுடன், எடிசலாட் வாடிக்கையாளர்களுக்கு உலகத் தரத்திலான வங்கிச் சேவையை அனுபவிக்கக் கூடிய சந்தர்ப்பமும் ஏற்படுத்தப்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது' என்றார்.


இது குறித்து எடிசலாட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி துமிந்திர ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில், 'எமது வாடிக்கையாளர்களுக்கு அதிகளவு வசதிகளையும் எமது சேவைகளை வாடிக்கையாளர்கள் இலகுவாக அனுபவிக்கக் கூடிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்து நாம் அதிகம் அக்கறை கொண்டுள்ளோம். உலகத்தர வங்கிச் சேவைகளை வழங்கும் Nனுடீ வங்கியுடன் இணைந்துள்ளதன் மூலம் எமது வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறந்த சேவைகளை வழங்கமுடியுமென நாம் எதிர்பார்க்கிறோம்' என்றார்.


இலங்கையின் கையடக்க தொலைபேசி சேவைகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் எடிசலாட் லங்கா நிறுவனம், பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகள், விற்பனை கொடுப்பனவுகள், விசேட இணைப்புகள் மற்றும் இதர சேவைகளை வழங்குவதில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளதுடன், புதிய அறிமுகங்கள், தரம் மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்ற செயற்பாடுகளில் முன்னணியில் திகழ்வது குறித்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. எடிசலாட் இலங்கையில் அறிமுகமானதிலிருந்து தற்போது வரை 3 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதுடன், இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும், சிறந்த சேவைகளை வழங்கும் முகமாகவும் வலையமைப்பு விஸ்தரிப்பை மேற்கொண்டிருந்தது.

தமது வாடிக்கையாளர்களுக்கு அர்ப்பணிப்பான சேவைகளை வழங்கும் வகையில், Nனுடீ வங்கியானது புதிய சேவைகளை தனது வங்கிக் கிளைகளின் மூலம் வழங்கி வருகிறது. Nனுடீ வங்கியின் சேவைகள் குறித்த மேலதிக விபரங்களை வங்கியின் 24 மணிநேர தொலைபேசி சேவையான 011 2 448 888 உடன் தொடர்பு கொள்ளவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் வங்கியின் மும்மொழிகளிலும் அமைந்த இணையத்தளமான www.ndbbank.com இற்கு விஜயம் செய்வதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.  
   
NDB வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி இந்திரஜித் விக்ரமசிங்க மற்றும் எடிசலாட் நிறுவனத்தின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி றியாஸ் ரஷிட் ஆகியோர் உடன்படிக்கையை கைமாற்றிக் கொள்வதை படத்தில் காணலாம்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X