A.P.Mathan / 2013 ஜனவரி 04 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் பீடத்தின் பேராசிரியரான கிஹான் டயஸ் கருத்து தெரிவிக்கையில், 'தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கு சிறந்த உதாரணமாக நாம் டிஜிட்டல் புகைப்படபிடிப்பு கலை எவ்வாறு ஃபிலிம் ரோல் முறையிலான புகைப்படப்பிடிப்பு கருவிகளை மாற்றீடு செய்திருந்தமையை குறிப்பிடலாம். இலங்கை இதுபோன்ற மாற்றங்களை எதிர்கொள்ள தயாராகவுள்ளது. குறுகிய காலப்பகுதியில் 12 மில்லியன் இலங்கையர்கள் கையடக்க தொலைபேசிகளுக்கு தம்மை பழக்கப்படுத்திக் கொண்டுள்ளமையானது எவ்வளவு விரைவாக மக்கள் புதிய சிந்தனைகளின் வெளிப்பாடுகளாக அமையும் கண்டுபிடிப்புகளுக்கு தம்மை பழக்கப்படுத்திக் கொள்கின்றனர் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும்' என்றார்.
ICTA அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரெஷான் தேவபுர கருத்து தெரிவிக்கையில், 'வர்த்தக கட்டமைப்பு கண்டுபிடிப்பு என்பது வர்த்தக முறையில் முற்றிலும் மாறுபட்ட வர்த்தக கட்டமைப்பை தோற்றுவிக்கக்கூடிய ஒரு முறையாக அமைந்துள்ளது. உதாரணமாக பங்களாதேஷை பொறுத்தமட்டில் பின்தங்கிய பிரதேசங்களை சேர்ந்த மக்களுக்கு இணைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் வர்த்தக செயற்பாடுகளை சைக்கிளோட்டிகள் மேற்கொண்டிருந்ததை நினைவுகூற விரும்புகிறேன்' என்றார்.
லீப்செட் நிறுவனத்தின் இலங்கை காரியாலயத்தின் பங்காளராக செயற்படும் ஷனில் பெர்ணான்டோ கருத்து தெரிவிக்கையில், 'இலங்கை வாடிக்கையாளர்கள் புதிய கண்டுபிடிப்பில் அமைந்த பொருட்களுக்கு தம்மை பழக்கப்படுத்திக்கொள்ள தயாராகவுள்ளனர். இது இலங்கையை உலகளாவிய ரீதியில் சிறந்த இடத்துக் கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது. இதற்கு பிரதான காரணம், இலங்கை ஓரங்கட்டப்பட்ட ஒரு நாடு அல்ல. நாட்டில் காணப்படும் இணைய வசதிகள் இலங்கையர்களை உலகின் அனைத்து பாகங்களுடனும் இலகுவாக தொடர்புகளை ஏற்படுத்தி உலக நடப்புகள் குறித்து விரைவாக அறிந்து கொள்ளக்கூடிய வசதிகள் காணப்படுகின்றமையை குறிப்பிடலாம். BPO துறையை பொறுத்தமட்டில் இலங்கையில் பல அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளன. பாரம்பரிய BPO சேவைகளை வழங்கும் முறையிலிருந்து இலங்கை மாற்றம் கண்டு வருகிறது. எனவே பெருமளவான நிறுவனங்கள் இந்த மாற்றத்துக்கு வழிகோலும் கண்டுபிடிப்பு நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது' என்றார். 6 minute ago
11 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
51 minute ago
1 hours ago