ஆடைத் தொழிற்றுறைக்காக Intellocut V2 ஐ அறிமுகம்

ஆடைத் தொழிற்றுறைக்காக ThreadSol, தனது முதல் தர தயாரிப்பான IntelloCut, Version 2.0 ஐ இலங்கையில் அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற ஆடைத் தொழிற்றுறை விநியோகத்தர் கண்காட்சியின் போது, இது  நேரடி விளக்கங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.  

IntelloCut Version 2.0 என்பது உலகின் முதலாவது artificial intelligence அடிப்படையிலான ஆடைத் தொழிற்றுறை கட்டமைப்பாக அமைந்துள்ளது. இதனூடாகத் தன்னியக்கத் துணி திட்டமிடல், துணிப் பயன்பாட்டை கண்காணித்தல்,  பயன்படுத்தலை மேம்படுத்தல் மற்றும் காணப்படும் ஆடைகளை அதிகளவு ஏற்றுமதி செய்ய உற்பத்தியாளர்களுக்கு உதவிகளை வழங்கல் போன்ற  நேரடி அனுகூலங்களை, உற்பத்தியாளர்கள் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.   

துறையில் அதிகளவு எதிர்பார்க்கப்பட்ட, ஊழியர் மற்றும் துணி போன்ற, உற்பத்திச் செலவைக் குறைக்கக்கூடிய மதிநுட்பமான தயாரிப்பு ஒன்றின் தேவையை, இந்தப் புதிய தொழில்நுட்பத்தீர்வு ஈடுசெய்துள்ளது. 

intelloCut இனால் மதிநுட்பமான முறையில் AI மற்றும் IoT அடிப்படையிலான திட்டமிடல் தீர்வைப் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.  

ThreadSol இன் ஸ்தாபக பிரதம நிறைவேற்று அதிகாரி மனாசிஜ் கங்குலி கருத்துத் தெரிவிக்கையில், “சர்வதேச ஆடைத் தொழிற்றுறையில், பன்முகத்தன்மை ஏற்படுத்தப்படுகின்றமை ஊடாக, புதுப்பிக்கப்பட்ட ஆளுமை அடிப்படையிலான உற்பத்தித்திறன் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனூடாக, உற்பத்தியில் ஈடுபடுவோருக்கு குறுகிய காலப்பகுதியில் பெருமளவான நவநாகரிக வடிவமைப்புகளை வெவ்வேறு வர்த்தக நாமங்களின் தேவைகளுக்கமைய நிவர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும். தன்னியக்கம் மற்றும் துரித செயற்பாடு போன்றன, ஆடைத் தொழிற்றுறையின் அடுத்த படிமுறையாக அமைந்துள்ளன. version 2 உடன் இதை எய்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.  

பாரியளவிலான உற்பத்தியாளர்களான இலங்கையின் Crystal Martin Brandix, MAS, Hirdaramani, பங்களாதேஷின் HS Fashions, Jiaxing New Rimei, Tomwell in China, Urmi, Bimexco, Fakri, Epic, இந்தோனேசியாவில் PAN Brothers, Metro Group, வியட்நாமில் Luenthai, Saitex, Dewhirst மற்றும் பல பிராந்திய நிறுவனங்களுடன் ThreadSol கைகோர்த்துள்ளது. இந்தத் தீர்வுகளினூடாக குறித்த நிறுவனங்களுக்குத் தமது இலாபத்தை ஒரு சதவீதத்தால் மேம்படுத்திக் கொள்ள முடிந்துள்ளது. தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கும் ஈடுகொடுக்க முடிந்துள்ளது.    


ஆடைத் தொழிற்றுறைக்காக Intellocut V2 ஐ அறிமுகம்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.