2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இலங்கையின் முதலாவது international shopping mall

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முதலாவது சர்வதேச ஷொப்பிங் தொகுதி, தலைநகரின் Colombo City Centre இல் இன்று (19) திறந்துவைக்கப்படவுள்ளது. சர்வதேச விற்பனை நாமங்களைக் கொண்ட கடைத்தொகுதிகளில், உலகளாவிய ரீதியிலான அதிசொகுசு மற்றும் உயர்தர விற்பனை நாமங்களைக் கொண்ட உற்பத்திகளை ஷொப்பிங் செய்யக்கூடிய அனுபவத்தை Colombo City Centre வழங்குகிறது.  

Colombo City Centre இன் தலைமை நிறைவேற்று அதிகாரி ஆனந்த் சுந்தரம் கருத்து வெளியிடுகையில், “கொழும்பு நகரவாசிகள் நீண்ட காலமாக எதிர்ப்பார்த்து காத்திருந்த சகல சர்வதேச தேவைகளையும் உள்ளடக்கிய அனுபவத்தை வழங்கக்கூடிய அனைத்து அம்சங்களும் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இலங்கையில் இலங்கையர்களுக்கு முதல் முறையாக சர்வதேச கடைத்தொகுதிகளில் ஷொப்பிங் செய்யக்கூடிய அனுபவமும், வாய்ப்பும் வழங்கப்படுவதோடு, மேலும் உலக நாடுகளின் தலைசிறந்த அறுசுவை உணவுகளை சுவைத்திடக்கூடிய உணவகங்கள், விற்பனை கூடங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை முழுமையாக அனுபவித்திடக்கூடிய சகல வசதிகளையும் இது உள்ளடக்கியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் இங்கு வரும் அனைவராலும் அதிகமாக ஈர்க்கப்படும்” என்றார்.  

இதற்கமைய, ஷொப்பிங் அனுபவங்கள், சர்வதேச உணவகங்கள், பொழுதுபோக்கு நடவடிக்கைகள் போன்றவற்றை புதிய முறையில் மாற்று விதமாக இலங்கையர்களுக்கு வழங்கும் ஒரேயொரு கூட்டுத்திட்டமாக கொழும்பு நகர மத்தியில் பிரம்மாண்டமாய் உருவெடுத்து வரும் Colombo City Centre கூட்டுத்திட்டத்தைச் சுட்டிக்காட்ட முடியும். சர்வதேச தரத்திலான உலகின் முன்னணி விற்பனை நாமங்களை உள்ளடக்கிய கடைத்தொகுதிகள் 200,000 சதுர அடி நிலப்பரப்பைக் கொண்டுள்ளது.   

நவீன தொழில்நுட்பத்திலான கருவிகளுக்கு Abans மற்றும் Apple காட்சியறைகள், அழகுக்கலை உற்பத்திகளுக்கு Body Shop அல்லது Spa Ceylon, நவீன புத்தாக்க ஆபரணங்களுக்கு Colombo Jewellery Stores அல்லது Swarovski, புதிய ஆடை அணிகலன்களுக்கு ALDO அல்லது Mango போன்ற பல்வேறு விற்பனை நாமங்களை இங்கு காணமுடியும்.   

உலகளாவிய ரீதியில் காணப்படும் பல்வேறு உணவு வகைகளை உள்ளடக்கிய அதிசொகுசு, ‘foodcourt’ இங்கு காணமுடியும். இதில் இலங்கையின் உள்நாட்டு உணவுகள் உள்ளிட்ட இந்திய, ஜப்பானிய, சீன, இந்தோனேஷிய, சிங்கப்பூர், போர்த்துக்கல் உள்ளிட்ட உலகளாவிய பல்வேறு நாடுகளின் அறுசுவை உணவுகளை உங்களுக்கு சுவைத்திடவும், அதேபோல் சிங்கப்பூர் சிக்கன் ரைஸ்ஸின் சுவையை அறிந்திடவும் முடியும்.   

மேலும் Three Star Michelin சமையல் வல்லுநரை கொண்ட அதிசொகுசுDesert Bar உடன், Tropical Island உணவகம் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இலங்கையர்களுக்கு முதல் முறையாக அனுபவிக்கக்கூடிய அதிசொகுசு மல்டிபிளெக்ஸ் சினிமா அரங்கம் Colombo City Centre இல் உருவாக்கப்பட்டு வருகிறது. 6 சினிமா திரைகளின் மூலம் ஒரு தினத்திற்கு 25 காட்சிகள் திரையிடப்படும். அதேபோல் இலங்கையின் சினிமா ரசிகர்கள் இதற்கு முன்னர் இலங்கையில் ஒருபோதும் அனுபவித்திராத 4k Projection தொழில்நுட்பத்தை Colombo CityCentre திரையரங்கம் அவர்களுக்கு வழங்கும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .