2020 மே 25, திங்கட்கிழமை

இலங்கை கட்டடக் கலை நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

Editorial   / 2019 ஜனவரி 06 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கட்டடக் கலை நிறுவனத்தின் 37ஆவது வருடாந்த அமர்வு 2019 பெப்ரவரி 20ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ‘இடங்களையும் மக்களையும் பிரதிபலிக்கும் கட்டடக் கலை’ என்ற தொனிப்பொருளின் கீழ் A19 - ‘உறுப்பினர்கள் வேலை மற்றும் வர்த்தகக் கண்காட்சி’ உடன் கூடிய தொடர்ச்சியான நிகழ்வுகளை இது உள்ளடக்கியிருக்கும்.  

SLA இன் 2018 - 2019 அமர்வுக்கான அதன் அனுசரணையாளர்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடல் நிகழ்வு கலதாரி ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது.   

“A’19- The Exhibition” ஐத் தொடர்ந்து வேர்சுவல் ரியலிடி இணையத்தளம் ஊடாக இலங்கை கட்டடக் கலை நிறுவனம் மற்றும் வர்த்தக சமூகத்தினருக்கு, அவர்களுடைய அபிமானமிக்க உற்பத்திகளையும் சேவைகள் தொடர்பான பரஸ்பர உரையாடலுக்கு இவ்விலத்திரனியல் முறையில் வழி வகுக்கக் கூடிய இலங்கை கட்டடக் கலை நிறுவனத்தின் கண்காட்சி 2019 பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது.  

“A’19” கண்காட்சி இம்முறை சம்பிரதாயமான முறைமையை விட்டு முன்னேறிச் சென்று கண்காட்சி நடத்தப்பட்ட அதேவிதத்தில் மெய்நிகர் இலத்திரனியல் கண்காட்சியாக மாற்றம் பெற்று பார்வையாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 275க்கும் அதிகமான காட்சி கூடங்களிலும் 130க்கும் மேற்பட்ட கட்டடக் கலைஞர்களின் பெனல்களாலும் காட்சிப்படுத்தப்பட்ட உற்பத்திகள், சேவைகளை ஆராய்வதும் பகுப்பாய்வு செய்வதும் சாத்தியமாகும்.   
இலங்கை கட்டடக் கலை நிறுவனத்தின் வருடாந்த அமர்வின் பங்குதாரர்களை இனங்காண்பது சம்பிரதாயமான ஒரு விடயமாவதோடு, மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வுமாகும்.

அவ்வடிப்படையில் 2019 பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள 37ஆவது வருடாந்த அமர்வுகளுக்கு அனுசரணை வழங்குவதற்காக கீழே குறிப்பிட்டப்பட்டுள்ள நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன.   
கடந்த பல ஆண்டுகளாக முதலிடத்தை அடைந்த அலுமெக்ஸ் குழுமம் இம்முறை மூலோபாய அனுசரணையாளராக செயற்பட முன்வந்துள்ளதுடன், நிப்பொன் பெயின்ட் லங்கா (பிரைவேட் லிமிடட்) முதன்மை அனுசரணையாளராக இலங்கை கட்டடக் கலை நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

இதேவேளை, இணை அனுசரணையாளரான ரஞ்சனாஸ் ஸெரமிக் (பிரைவேட் லிமிடட்), இலங்கை கட்டடக் கலை நிறுவனத்தின் உறுப்பினர்கள் நிகழ்ச்சி அனுசரணையாளரான நவீன் ஸெரமிக் PLC, ரோயல் ஸெரமிக் லங்கா PLC, லங்கா டயில்ஸ் PLC மற்றும் மெல்வயர் ரோலிங் (பிரைவேட் லிமிடட்) நிறுவனங்கள் இலங்கை கட்டடக் கலை நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X