2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

சுழற்சி பொருளாதார அடிப்படையிலான வளங்கள் மீட்சிக்கு INSEE Ecocycle நடவடிக்கை

Editorial   / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுழற்சிப் பொருளாதாரத்துக்கு மாற்றமடைவது என்பது நிலைபேறான அபிவிருத்தி இலக்கு (SDG) – 12 நிலைபேறான உற்பத்தி, நுகர்வு ஆகியவற்றுடன் நேரடியாக தொடர்புடைய சர்வதேச சூழல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு அத்தியாவசியமானதாக அமைந்திருக்கும் என உலகின் பல வியாபாரத் தலைவர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள், கல்விமான்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் கருத்தாக அமைந்துள்ளது.

உள்நாட்டில் நிலவும் கழிவுப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக நீட்சிப் பொருளாதாரத்திலிருந்து சுழற்சிப் பொருளாதாரத்துக்கு மாற்றம் செய்யப்பட வேண்டியது முக்கியமானது என்பதுடன், அதற்காக சகல துறைகளையும் சேர்ந்த பங்காளர்கள் ஒன்றிணைந்து முன்வர வேண்டும். INSEE Ecocycle ஒரு பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனம் எனும் வகையில், அரச அதிகார அமைப்புகள், தொழிற்துறைகள் மற்றும் சமூகங்களுடன் கைகோர்த்து பொருளாதாரத்தை நிலைபேறான சூழலுக்கு நட்பான பொருளாதாரமாக திகழச் செய்ய பங்களிப்பு வழங்குகின்றது.

கழிவு முகாமைத்துவம் தொடர்பில் 17 வருட கால அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், 800 கூட்டாண்மை வாடிக்கையாளர்கள், அரசாங்க நிறுவனங்களின் 1,000,000 மெட்ரிக் டொன்கள் வரையான எடையைக் கொண்ட கழிவுகளை மீள்சுழற்சிக்குட்படுத்திய அனுபவத்தைக் கொண்டுள்ள INSEE Ecocycle லங்கா, நிலைபேறான கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளில் நாட்டின் ஒப்பற்ற முன்னோடியாகத் திகழ்கின்றது.

சீமெந்து சூளை இணைப் பதப்படுத்தல் தீர்வு என்பதிலிருந்து வளங்கள் மீட்சி அடிப்படையிலான கழிவு முகாமைத்துவ தீர்வுகளுக்கு விரிவாக்கமடைந்து வருவதுடன், தனது உலகத் தரம் வாய்ந்த வளங்கள், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், பங்களாதேஷ், இந்தோனேசியா போன்ற நாடுகளிலுள்ள வலையமைப்பு நிறுவனங்களின் பலத்துடன் தேசிய கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளுக்கு பெருமளவு பங்களிப்பை வழங்கும். 'INSEE Ecocycle Environment Solutions' பிரிவில் ஆய்வுகூட சேவைகள், பயிற்சி, ஆலோசனை, தொழிற்துறை தூய்மைப்படுத்தல், விசேடத்துவம் வாய்ந்த சரக்குக் கையாளல் சேவை, சூழல் மீள்இணைப்பித்தல், அவசர துலங்கல் சேவைகள், ந-கழிவு அகற்றல் மற்றும் பல சேவைகள் அடங்கியுள்ளன.

தேசிய கழிவு முகாமைத்துவ பங்காளர் ஒன்றுகூடியிருந்த போது, இரும்பு கழிவுகள் மீள்சுழற்சி, இலத்திரனியல் கழிவுகள், கண்ணாடி மீள்சுழற்சி, பெட் போத்தல் மீள்சுழற்சி, சவர்க்காரம்/டிடர்ஜன்ட் மீள்சுழற்சி, பிளாஸ்ரிக் மீள்சுழற்சி, கார்ட்போட் மற்றும் கடதான மீள்சுழற்சி, யோகட் கோப்பை மீள்சுழற்சி, கப்பல்சார் கழிவு முகாமைத்துவம், கொம்போஸ்ட், பிரோலிசிஸ் போன்றன தொடர்பில் கருத்துப் பகிரப்பட்டதுடன், இலங்கையில் கழிவு பிரச்சனைக்கு INSEE Ecocycle உடன் இணைந்து நிலைபேறான தீர்வுகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்தப்படுகின்றது.

இந்தத் திட்டம் தொடர்பாக Ecocycleஇன் பணிப்பாளர் சஞ்ஜீவ சூளகுமார கருத்துத் தெரிவிக்கையில்,

“INSEE Ecocycle இன் தலைமைத்துவத்துடன், கழிவு முகாமைத்துவதின் முதல் படியாக, நாட்டில் காணப்படும் பல்வேறு கழிவுப் பிரச்சனைகளைக் கையாள்வதற்கு ஒன்றிணைந்த முயற்சியை கட்டியெழுப்பிக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்த ஒன்றிணைவின் நோக்கம், பங்காளர் அங்கத்தவர்களின் திறன் கட்டியெழுப்பல் மற்றும் அனுமதி வழங்கல், நாட்டுக்கு சேவைகளைப் பெற்றுக் கொடுத்தலாகும். ஒன்றிணைந்து செயலாற்றுவதனூடாக, நிலைபேறான கழிவு முகாமைத்துவத்தில் எம்மால் அசல் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கின்றோம்” என்றார்.

நிலைபேறான சூழலுக்கு நட்பான பொருளாதாரத்தை எய்துவது என்பது எப்போதும் INSEE Ecocycle இன் முன்னிலையாக அமைந்துள்ளதுடன், இலங்கையின் பரந்தளவு தொழிற்றுறைகளின் தொழிற்றுறைசார் சூழல் பிரசன்னங்களை மேம்படுத்துவது தொடர்பில் பணியாற்றிய வண்ணமுள்ளது. ஜனாதிபதியின் தேசிய நிகழ்ச்சி நிரலிலும், தொழிற்றுறைகள் நீட்சியான பொருளாதாரத்திலிருந்து, சுழற்சியான பொருளாதாரத்துக்கு மாற வேண்டியமை தொடர்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், ஒரு துறையின் கழிவை, பிரிதொரு துறை மூலப்பொருளாக பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பில் குறிப்பிட்டுள்ளது. 3R கொள்கையை INSEE Ecocycle கொண்டுள்ளது: மீள் பாவனை, மீள் சுழற்சி மற்றும் மீள் குறிக்கோள் (Re-Use, Re-Cycle, and Re-Purpose) ஆகியன சூழலுக்கு நட்பான தொழிற்றுறை வலயங்களை உருவாக்குவதுடன், அதனூடாக சூழலுக்கு நட்பான பொருளாதாரங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

சஞ்ஜீவ மேலும் குறிப்பிடுகையில்,

“ஏனைய பங்காளர்களுடன் Ecocycle இணைந்து அநுராதபுரத்தில் முன்னெடுத்திருந்த 'City Cleaning Project' திட்டம் சிறந்த உதாரணமாகக் குறிப்பிட முடியும். மீள்சுழற்சிக்குட்படுத்த முடியாத பிரித்தெடுக்கப்பட்ட நகரசபை கழிவுகளுக்கு தீர்வை வழங்க முடிந்தது.  அரச சார்பற்ற நிறுவனம், நகர சபைகள், நன்கொடை அமைப்புகள், Ecocycle ஆகியன இணைந்து வெற்றிகரமாக முன்னெடுத்திருந்த திட்டமாக இது அமைந்துள்ளது”  என்றார்.

ஒன்றிணைக்கப்பட்ட கழிவு முகாமைத்துவ தீர்வுகள் (IWMS) ஐ நோக்கி இயங்கும் நிலையில், விநியோக தொடர்களை சீராக்கம் செய்வது, பங்காண்மைகளினூடாக தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதனூடாக சுழற்சி பொருளாதார தீர்வுகளை இனங்காணும் வகையில் Ecocycle செயலாற்றுகின்றது. உதாரணமாக, நெல் உமி என்பது கழிவாக கருதப்பட்ட நிலையில், அதற்கான தீர்வொன்றை Ecocycle வடிவமைத்திருந்தது. இதனையடுத்து அநுராதபுரம், கெக்கிராவ, புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பின்தங்கிய சமூகத்தினர் அதிகரித்த உமி கேள்வியினூடாக (Demand) பயன்பெற்றனர்.

மத்திய சூழல் அதிகார சபை, மாகாண சூழல் அதிகார சபை, கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபை, பூச்சிகொல்லி பதிவாளர் அலுவலகம், நுகர்வோர் விவகார அதிகார சபை, இலங்கை கட்டளைகள் நிறுவனம், சகல அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் தெங்கு, இறப்பர், தேயிலை மற்றும் பல தேசிய ஆராச்சி நிறுவனங்கள் போன்றவற்றுக்கு நிலைபேறான கழிவு முகாமைத்துவ தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு INSEE Ecocycle நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கழிவு முகாமைத்துவத்தில் புரட்சியை ஏற்படுத்தி, புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட INSEE Ecocycle இன் வளங்கள் மீட்சி நிலையத்தினால் முறைசார் கழிவு சேகரிப்பு முறை பின்பற்றப்படுகின்றது. குறிப்பாக வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள், நுகர்வின் பின்னராக பொருட்கள் பிரிவினரிடமிருந்து நவீன வியாபாரம், பிரித்தெடுப்பு, தூய்மைப்படுத்தல், மீளப் பயன்பாடு மற்றும் மீள்சுழற்சி/மேல்சுழற்சி போன்ற படிமுறைகளினூடாக திரட்டுகின்றது. வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் துறையில் மாற்றத்தை ஏற்படுத்த Ecocycle கவனம் செலுத்துவதுடன், யுனிலீவர், இதர பல்தேசிய நிறுவனங்களுடன் இணைந்து ஒன்றிணைந்த கழிவு முகாமைத்துவ தீர்வுகளுக்கான எதிர்காலத்தை கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ளது. அதனூடாக SDG 12 க்கு பங்களிப்பு வழங்குவதுடன், நிலைபேறான உற்பத்தி, நுகர்வுக்கு பங்களிப்பு வழங்குகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--