Gavitha / 2016 மே 17 , மு.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் சகல மாவட்டங்களையும் சேர்ந்த 300 சிறுவர்கள் தமது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் இணைந்து கொழும்பில் செலிங்கோ லைஃப் அண்மையில் ஏற்பாடு செய்திருந்த கல்விச் சுற்றுலாவில் பங்கேற்றனர்.
ஆயுள் காப்புறுதி தலைவர்களான செலிங்கோ லைஃப்பின் 'ரண் தரு சாரிக்கா'வின் மூன்றாவது கட்ட நிகழ்வுக்கான சுற்றுலா பத்தரமுல்லையில் உள்ள 'தியட உயன' நீர் பூங்கா, கொழும்பு துறைமுகம், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், தாமரைத் தடாக அரங்கம் என்பனவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.
4 வயதுக்கும் 12 வயதக்கும் இடைப்பட்ட சிறுவர்களே இதில் பங்கேற்றனர். சுற்றுலாவின் போது, அனைவருக்குமான உணவு மற்றும் சிற்றுண்டிகள் என்பனவும் செலிங்கோ லைஃப்பால் வழங்கப்பட்டன.
செலிங்கோ லைஃப் நாடு முழுவதும் உள்ள அதன் காப்புறுதிதாரர்களோடும் அவர்கள் குடும்பத்தவர்களோடும் நேரடியாக பல வருடாந்த நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றது. இதில் புதிய கல்வி ஆண்டுக்கான வருடாந்த கால அட்டவணைகளை விநியோகிப்பதோடு சம்பந்தப்பட்டதே இந்த 'ரண் தரு சாரிக்கா' சுற்றுலாவாகும். இவ்வாண்டு தொடக்கத்தில் செலிங்கோ லைஃப் 500,000 கால அட்டவணைகளை விநியோகித்திருந்தது.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026