Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 19 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைதகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் அமைப்பு (ICTA) இனால் ஒழுங்கு செய்யப்படும்தொழில்நுட்ப ஆரம்ப ஆதரவுநிகழ்ச்சித்திட்டமான Spiralation, 2019ஆம் ஆண்டில்16 தொழில்நுட்ப தொடக்கநிலை நிறுவனங்களுக்கு ஆரம்பநிலை நிதியுதவி, பூரண பயிற்சி, பயிற்சிப்பட்டறைகள் மற்றும் வழிகாட்டல் ஊடாக ஆதரவளித்தது. இதன்போதுதெரிவுசெய்யப்பட்ட 12 தொழில்நுட்ப தொடக்கநிலை வணிகங்களுக்கு விரிவான பயிற்சி, அரச அங்கீகாரம் மற்றும் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றுடன் தலா 1.5 மில்லியன் நிதியதவியளிக்கப்பட்டதுடன், மேலும் 4 தொடக்கநிலை வணிகங்களுக்கு அனைத்தையும் உள்ளடக்கிய பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டன. Spiralation, இதுவரை மொத்தமாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த 70 தொடக்கநிலை வணிகங்களுக்கு உதவி புரிந்துள்ளதுடன், அவை பாரிய நிறுவனங்களாக அபிவிருத்தியடையத் தேவையான வழிகாட்டுதல் மற்றும் பயன்பாடுகள் மூலம் துணைபுரிகின்றது.
Spiralation, தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துதல், சமூக பிரச்சினைகளை தீர்த்தல் மற்றும் சமூகத்தில் செல்வாக்குச் செலுத்தல் என்பவற்றில் கவனம் செலுத்தும் தொழில்நுட்ப தொடக்கநிலை வணிகங்களை வலுவூட்டுவதன் மூலமாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் பிரதானமாக கவனம் செலுத்துகிறது. இதன் மூலமாக, ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உலகளாவிய இலக்குகள்என்று அழைக்கப்படும் நிலையானஅபிவிருத்தி இலக்குகளான (SDGs) வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைக்கான அழைப்பு,புவியைப் பாதுகாத்தல், அமைதிக்கான விடியல் மற்றும் 2030 ஆம் ஆண்டளவில் பூமிக்கு சௌபாக்கியம்ஆகியவற்றை அடைய இந்த நிகழ்ச்சித்திட்டம் எதிர்ப்பார்க்கின்றது.
Spiralation2019 நிகழ்வின் மூலம் Frammix, Thingerbits, Tracified, RN Innovations, Ideal Six, BookClub.lk, SchoolX, Univiser, Smartstudy, Real Pixels, Kayal Technologies, Cookoo eats, Iron blood games, Lanka Travel Mart, Direct Payமற்றும்FieldRஆகிய தொழில்நுட்ப தொடக்கநிலை நிறுவனங்களுக்கு உதவியளிக்கப்பட்டன. இந்த தொழில்நுட்ப தொடக்கநிலை வணிகங்களில் சில ஏற்கனவே இயங்கி வருகின்றன. இவை குறிப்பிட்ட துறைகளில் பாரிய நிறுவனங்களாக அபிவிருத்தி அடைந்து வருவதுடன், நிறுவனத்தின் இலக்குகளை அடைவதற்கு மேலதிகமாக பேண்தகு எதிர்காலத்தை செயல்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு பல்துறை தீர்வுகளை வழங்கி வருகின்றன.
9 hours ago
18 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
18 Oct 2025