2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

தொலைத்தொடர்புத் துறையில் தங்கத் தர வாடிக்கையாளர் சேவையை வழங்கும் எயார்டெல்

S.Sekar   / 2021 ஏப்ரல் 07 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் (TRCSL) 2020ஆம் ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் நடத்திய, சேவையின் தரம் (QoS) கணக்கெடுப்பின்படி வாடிக்கையாளர் சேவை அளவீடுகளில் சிறந்த செயல்திறனை எயார்டெல் லங்கா அடைந்துள்ளதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முதல் தடவையாக நாடு முழுமையாக முடக்கப்பட்ட காலக்கட்டத்தில் (LockDown) ‘வீட்டிலிருந்து வேலை’ என்ற (Work from Home) சூழலுக்கு மாற்றமடைந்த காலப்பகுதியிலேயே இந்த அங்கீகாரம் எயார்டெல்லுக்கு கிடைத்துள்ளது.

இந்த அங்கீகாரம் குறித்து கருத்து தெரிவித்த எயார்டெல்லின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான அஷீஷ் சந்திரா, “சேவை கலாச்சாரத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கே எயார்டெல் நிறுவனம் என்ற வகையில் நாம் எப்பொழுதும் முயற்சி செய்கிறோம். உலகத் தரம் வாய்ந்த வாடிக்கையாளர் சேவையுடன், எங்களது வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை வளமாக்குவதை நோக்காகக் கொண்டுள்ளோம். இந்த இலக்கை தக்கவைத்துக் கொள்வதற்கும், புதிய உச்சத்தை எட்டுவதற்கும் அர்ப்பணிப்புள்ள ஒரு குழுவின் ஒத்துழைப்பு இல்லாமல் எமது சேவைத் தரத்தை சர்வதேச அளவீடுகளுக்கு அப்பால் புதிய விதங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்க முடியாமல் போயிருக்கும்.” என தெரிவித்தார்.

2020 ஜனவரி முதல் ஜூன் மாதங்களுக்கு இடையில் TRCSL அளித்த சமீபத்திய அறிக்கையின்படி, எயார்டெல் லங்கா வாடிக்கையாளர் சேவை அளவீடுகளில் சிறந்து விளங்கியது. இதேபோல், தொலைத்தொடர்பு துறையில் முன்னணியிலுள்ள, ‘IVR Initial Response Time’, ‘Initial Human Operator Response Time after the IVR system refers the call for operator assistance’ மற்றும் ‘Bill Correctness Complaints Resolution Time’ ஆகிய அளவீடுகளில் முன்னிலை வகிக்கிறது.

TRCSLஇனால் முன்வைக்கப்பட்ட தரங்களுடன் ஒப்பிடும்போது தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள் (Mobile Operator) தங்களது வலையமைப்பின் தரம் மற்றும் வாடிக்கையாளர் சேவையைப் பற்றி ‘செல்லிட தொலைபேசி சேவைகளுக்கான சேவை ஒப்பீட்டு அறிக்கை’யை மதிப்பீடு செய்கிறது. இந்த தரநிலைகள் சர்வதேச அமைப்புக்களால் நிறுவப்பட்ட தரங்களுக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையானது இலங்கையின் வாடிக்கையாளர்கள் மத்தியில் அவர்களின் தகவல்களுக்காகவும், தொகுப்பு அளவீடுகளின் மேம்பாட்டிற்காகவும் விநியோகிக்கப்படுகிறது. இந்த அறிக்கையின் நோக்கம் தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள் பொதுவாக காலாண்டின் அடிப்படையில் கண்காணிக்கப்படும் QoS அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X