2020 மே 29, வெள்ளிக்கிழமை

நொரிடாகே நிறுவனத்துக்கு இரு விருதுகள்

Editorial   / 2019 மே 09 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நொரிடாகே லங்கா போர்சலைன் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் மேற்கொண்ட கூட்டாண்மை சமூகப் பொறுப்பு (CSR) முன்னெடுப்புகளை அங்கிகரிக்கும் விதமாக வழங்கப்பட்ட இரு விருதுகளை அந்நிறுவனம் தனதாக்கிக் கொண்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற ‘JASTECA CSR / நிலைபேண்தகு தன்மை விருதுகள்’, ‘இலங்கை கூட்டாண்மை சுகாதாரம், உற்பத்தித்திறன் விருதுகள்’ ஆகிய நிகழ்வுகளிலேயே இவ்விரு விருதுகளையும் நொரிடாகே நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ளது.

மாத்தளையில், நக்கில்ஸ் வனவள பகுதியிலுள்ள றிவர்ஸ்டனின் சிதைவடைந்திருந்த பகுதிகளை ‘காபன் தடம்’ (Carbon footprint) செயற்றிட்டத்தின் கீழ் சீரமைத்து பழைய நிலைக்கு கொண்டு வந்தமைக்காக நொரிடாகே லங்கா போர்சலைன் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனமானது, ‘JASTECA CSR / நிலைபேண்தகு தன்மை விருதுகள் 2018’ நிகழ்வின் போது தங்க விருதைப் பெற்றுக் கொண்டது.

நோரிடாகே நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட சூழல்சார் நிலைபேண்தகு தன்மையுடைய, புத்தாக்க செயற்பாடாக இச் செயற்றிட்டம் அங்கிகரிக்கப்பட்டிருக்கின்றது.

அதேவேளை, நொரிடாகே நிறுவனமானது ‘ஊழியர்களின் ஆரோக்கியம், நல்வாழ்வுக்காக மேற்கொண்ட மிகச் சிறப்பான முன்முயற்சிகளுக்காக’ இலங்கை கூட்டாண்மை சுகாதாரம், உற்பத்தித்திறன் விருதுகள் 2018 நிகழ்வில் இந்நிறுவனம் ஒரு விஷேட விருதை தனதாக்கிக் கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X