2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

' இலங்கைக்கு சாமர்த்தியமான தீர்வுகள்' IBM செயலமர்வு:

Super User   / 2010 ஓகஸ்ட் 12 , பி.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாமர்த்தியமான இலங்கைக்கு சாமர்த்தியமான தீர்வுகள் எனும் தொனிப்பொருளில் IBM  செயலமர்வு அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.இந்நிகழ்வில்,  IBM நிறுவனத்தின் இலங்கைக்கான பொது முகாமையாளர் கிறிஷான் பெர்னான்டோ கருத்து தெரிவிக்கையில், "எமது நிறுவனத்தின் நோக்கம், உலகசெயற்பாடுகள், ஒவ்வொரு மனிதனும், வர்த்தகமும், நிறுவனமும், அரசாங்கமும், இயற்கை கட்டமைப்பு மற்றும் மனிதால் தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு கட்டமைப்பும் எவ்வாறு அடுத்த நிலைக்கு தரமுயர்த்தி அவை ஒன்றுக்கொன்று தொடர்பாடல்களை மேற்கொள்கிறது என்பதை ஆராய்ந்து அவற்றுக்கு தீர்வைகளை வழங்குவதாகும்.

இன்றைய காலகட்டத்தில், சாமர்த்தியமான தீர்வைகளான சாமர்த்தியமான மருத்துவ வசதிகள், சாமர்த்தியமான வலுக்கட்டமைப்பு, சாமர்த்தியமான நகரங்கள், சாமர்த்தியமான போக்குவரத்து, சாமர்த்தியமான வங்கிகள், சாமர்த்தியமான தொலைத் தொடர்பாடல்கள், சாமர்த்தியமான கல்வி, சாமர்த்தியமான உணவு மற்றும் நீர் போன்றன உலகளாவிய ரீதியில் மாற்றத்தை எதிர்கொள்ளும் அனைத்து சமுதாயத்தினருக்கும் பெருமளவில் உதவுகின்றன. தற்போது இந்த சாமர்த்தியமான தீர்வைகள் எமது நாட்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் சாமர்த்தியமான இலங்கையை கட்டியெழுப்ப முடியும்" என கூறினார்.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பொருளாதார மீளாய்வுகளுக்கான ஜனாதிபதி ஆலோசகரும், பொருளாதார பிரதி அமைச்சருமான கலாநிதி சரத் அமுனுகம கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலையில்I BM  நிறுவனத்தின் வர்த்தக தீர்வுகள் இலங்கையை அடுத்த நிலைக்கு முன்னெடுத்துச் செல்வதற்கு மிகவும் முக்கியமானது என்றார்.

இந்நிகழ்வில் IBM   நிறுவனத்தின் சாமர்த்தியமான மென்பொருள் கட்டமைப்புசெயற்திறன் குறித்து விளக்கமளிக்கப்பட்டிருந்தமையும், இதன் மூலம் 100,000 வர்த்தக வல்லுநர்கள்  IBM  வலையமைப்பில் இணைக்கப்பட்டிருந்தமையும் விசேட அம்சமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .