Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2020 டிசெம்பர் 15 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்காக பாதுகாப்பு அமைச்சில் அர்ப்பணிப்பதை வரவேற்கும் முகமாக இலங்கையின் முன்னணி துணி தயாரிப்பாளர்களான ஹேலிஸ் ஃபெப்ரிக் நிறுவனம் இலங்கை இராணுவத்திற்கு 11,500 மீற்றர் துணிகளை அண்மையில் அன்பளிப்புச் செய்தது.
ஹேலிஸின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹான் பண்டித்தகேயுடன் ஹேலிஸ் ஃபெப்ரிக் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர், ரொஹான் குணதிலக்கவினால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.டி.எச். கமல் குணரத்னவிடன் இந்த அன்பளிப்பு கையளிக்கப்பட்டது. இவ்வாறான தேசிய அர்த்தக காலப்பகுதியில் பாதுகாப்பு பிரிவுக்கு ஹேலிஸ் ஃபெப்ரிக் நிறுவனம் ஒத்துழைப்பு வழங்கிய விதம் இந்த அன்பளிப்பின் மூலம் பிரதிபலிப்புடன், வைரஸ் பரவும் அபாயத்தைக் கட்டுப்படுத்தி இலங்கையை வழமையான நிலைக்கு கொண்டுவருவதற்காக அவர்களின் முயற்சிகளை பாராட்டும் வகையில் இந்த அன்பளிப்பு அமைந்துள்ளது.
நிறுவனத்தினால் இலங்கை இராணுவ வீரர்களுக்கு ரி-சேர்ட், பெனியன்களை தைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் இரு துணி வகைகளை தயாரித்துள்ளதுடன், அதனை குளிரான காலநிலைக்கு மட்டுமன்றி உஷ்ணமான காலநிலையிலும் பயிற்சிகளின் போது அணிந்து கொள்ள ஏற்றவிதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.
“கொரோனா வைரஸ் தொற்றுநோயுடன் இலங்கையின் பொருளாதாரத்துக்கும் மற்றும் சுகாதாரத்துக்கும் பெருமளவில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதுடன் இந்த தொற்றுநோய் வேகமாக பரவுவதை தடுப்பதற்காக பாதுகாப்புஅமைச்சினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மிகவும் வரவேற்கத்தக்கது. முன்னெப்போதும் இல்லாத அளவில், இந்த நடவடிக்கையின் போது, முன்னால் நிற்கும் எமது பாதுகாப்பு படையினரின் சேவையை கௌரவிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். அதேபோல், ஹேலிஸ் ஃபெப்ரிக் எனும் எம்மால் எமது இலச்சினையான ஏற்றுமதி தரங்கொண்ட துணிவகைகளை இலங்கை இராணுவத்திற்கு பெற்றுக் கொடுப்பது இதனால் ஆகும்” என ஹேலிஸ் ஃபெப்ரிக் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரொஹான் குணதிலக்க தெரிவித்தார்.
ஹேலிஸ் ஃபெப்ரிக் பி.எல்.சி. எனும் ஹேலிஸ் குழுமத்துக்கு இணையாக, இயற்கையானதும் மற்றும் செயற்கையான பொருள்களால் தயாரிக்கப்படும் துணி உற்பத்திகளுக்கான திட்டத்திலிருந்து தயாரிப்பு வரையான இறுதித் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் ஆற்றல் உள்ள இலங்கையின் துணி உற்பத்தியின் முன்னோடி நிறுவனமாகும். அதன் உற்பத்தித் திறனுடன் மாதம் ஒன்றுக்கு மூன்று மில்லியன் மீற்றருக்கும் அதிகமான அளவில் துணிகளை தயாரித்து விநியோகிக்கின்றது. மேலும் ஹேலிஸ் ஃபெப்ரிக் நிறுவனம் மிகவும் உயர்ந்த மட்டத்தில் துணி தயாரிப்பாளர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago