Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 18 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொகவந்தலாவை ரீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனம் 2009/10 நிதியாண்டில் வரிக்கு முந்திய இலாபமாக 159 % அதிகரிப்பை ஈட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் வரிக்கு பிந்திய இலாபத்தை விட 150% அதிகமாகும். நடப்பாண்டின் வரிக்கு முன்னைய இலாபமாக 134 மில்லியன் ரூபாய் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு வரிக்கு முன்னைய நஷ்டமாக 273,68 மில்லியன் ரூபாய் பதிவாகியிருந்தது. 2009/10 நிதியாண்டில் பங்கொன்றின் மீதான வருமானம் 2.26 ஆக பதிவாகியுள்ளதாகவும் கடந்த நிதியாண்டில் இது (-) 4.54 ஆக பதிவாகியிருந்தது.
நிறுவனத்தின் வருடாந்த தேயிலை தயாரிப்பு 8.16 மில்லியன் கிலோவாக பதிவாகியுள்ளதாகவும், கடந்த ஆண்டில் 7.95 மில்லியன் கிலோகவும் காணப்பட்டது. நடப்பு ஆண்டில் 362.22 கிலோ தேயிலை விற்பனை செய்யப்பட்டதாகவும், கடந்த ஆண்டில் 273.68 கிலோ ஆக காணப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் தயாரிப்புக்கான செலவீனம் கிலோ ஒன்றுக்கு 331.21 ஆகவும் கடந்த ஆண்டு இது 271.31 ஆக காணப்பட்டதாகவும் இதற்கு காரணங்களாக, அதிகரித்த சம்பளங்கள், எரிபொருள் மற்றும் உரங்களுக்கான செலவீனங்கள் அதிகரித்தமை போன்றனவாகும்.
பொகவந்தலாவை ரீ எஸ்டேட்ஸ் பிஎல்சியின் தலைவர் டி.ஜே.அம்பானி கருத்து தெரிவிக்கையில், "இலங்கை தேயிலைச் சபையின் தரவுகளுக்கு அமைய, கடந்த ஆண்டு மொத்த தேயிலை உற்பத்தி 290 மில்லியன் கிலோவாக அமைந்துள்ளது. இது இதற்கு முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9 வீதம் குறைவாகும். ஆயினும் இந்த நிலையிலும் பொகவந்தலாவை நிறுவனம் பெருமளவான வளர்ச்சியை அடைந்துள்ளது.
இதற்கு பிரதான காரணங்களாக எமது பாரம்பரிய சந்தைகளான மத்திய கிழக்கு, பிரித்தானியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் அதிகரித்தமையும், புதிய சந்தைவாய்ப்புகளான அமெரிக்கா, ஒல்லாந்து மற்றும் லித்துவேனியா போன்ற நாடுகளில் வர்த்தக குறியீட்டை நிலைநாட்டியமையையும் குறிப்பிட முடியும்" என்றார்.
மலையகத்தில் அமைந்துள்ள 11 பெருந்தோட்டங்களில் 193473 மில்லியன் ருபா தேறிய இலாபமாக பதிவாகியுள்ளது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 207 வீத அதிகரிப்பாகும். முன்னைய நிதியாண்டில் 44.54 மில்லியன் ரூபாவை தேறிய நட்;டமாக ஈட்டியிருந்த தாழ்நாட்டு பெருந்தோட்டங்கள் இம்முறை 34169 மில்லியன் ரூபாவை தேறிய இலாபமாக ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலாபத்தை ஈட்டிக்கொள்வதற்காக நிறுவனம் பல்வேறுவிதமான நீண்ட கால செயற்திட்டங்களில் 203 மில்லியன் ரூபாவை முதலீடு செய்திருந்தது. இதில் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை அபிவிருத்தி செய்தல், தொழில்சாலைகளை நவீனமயப்படுத்தல், சிறந்த எரிபொருள் வடிகாலமைப்பை உருவாக்கல் போன்றன உள்ளடங்குகின்றன.
தொடர்ந்து உலக பொருளாதாரம் சரிவை எதிர்கொண்டுள்ள நிலையிலும், எரிபொருள் மற்றும் உரங்களின் விலைகள் அதிகரித்துள்ளமையினாலும் நிறுவனம் பல்வோறு புதிய மாற்று முதலீட்டு முயற்சிகளில் கவனம் செலுத்தி வருகிறது. இதில் சுற்றுலா திட்டங்கள், உலர் பண்ணைகள் மற்றும் விவசாய வனத்திட்டங்களை இந்த நிதியாண்டில் முன்னெடுப்பது குறித்து ஆராய்ந்து வருகிறது.
57 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago