2020 நவம்பர் 28, சனிக்கிழமை

மோட்டார் வாகன பதிவுகளில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 13 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ச.சேகர்)

இந்த ஆண்டின் முதல் பகுதியிலிருந்து மோட்டார் வாகனப்பதிவுகளில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு காணப்படுவதாக மோட்டார் வாகன திணைக்களத்தின் பதிவாளர் நாயகம் எச்.எஸ்.ஹரிஸ்சந்திர - தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் மோட்டார் வாகனப்பதிவுகளில் சடுதியான வீழ்ச்சி காணப்பட்டிருந்த போதிலும், இந்த ஆண்டின் முதல் மாதப்பகுதியில் மாத்திரம் 30000இற்கும் அதிகமான மோட்டார் வாகனங்கள்  பதிவு செய்யப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டார்.

மேலும் அதிகளவு புகையை வெளியிடும் வாகனங்களை தடைசெய்வது குறித்து தாம் ஆராய்ந்து வருவதாகவும், இதற்காக 50 மில்லியன் ரூபா செலவில் ஜேர்மனியிலிருந்து புகை கசிவை கண்டறியும் 45 சாதனங்களை இறக்குமதி செய்வதற்கான திட்டங்களை இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .