2020 நவம்பர் 28, சனிக்கிழமை

மத்தளை விமான நிலையத்தில் தரையிறங்கவிருக்கும் முதலாவது விமானம் அமெரிக்காவிலிருந்து வருகிறது

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 19 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிதாக நிர்மாணிக்கப்பட்டு எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தில் முதன் முதலாக தரையிறங்கவுள்ள விமானம், அமெரிக்காவிலிருந்து வருகை தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை உள்ளடக்கியதாக இந்த விமானம் தரையிறங்கவுள்ளது.

இந்த விசேட விமானத்தில் பயணிப்பதற்காக சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட ஏற்பாடுகளும் அழைப்புகளும் எமிரேட்ஸ் விமான சேவையின் மூலம் விடுக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பமான மத்தளை விமான நிலையத்தின் நிர்மாணப்பணிகள், 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--